பக்கம்:புதிய பார்வை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 - புதிய பார்வை

என்பதனலேயே அவற்றை நான் இப்படிக் கூறுகிறேன். என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சமூகத் தன்மை களையும், சமுதாய எண்ணங்களையும் இணேக்கும் சாதன மாக வசனம் வருவதற்கு முந்திய ஒரு காலகட்டத்தில் கவிதை படைக்க நேர்ந்த காரணத்தினுல் பாரதிக்கு எளி மையை மேற்கொண்டே தீரவேண்டிய அவசியம் ஏற்பட் டது. செய்யுள் யுகம் என்ற சலிப்பு பின் கின்று முடுக்க வசனயுகம் என்ற வேகம் முன்கின்று தடுக்க இடையே, அமைந்த மாபெரும் சாதனேயே பாரதியின் கவிதை.

பாரதிக்கு முன் இடைக்காலக் கவிதை தனிப்பாடல் கவிதை. அதாவது அப்பெயரில் அழைக்கப்பட்ட செய்யுட் கள், உலா, மடல், அக்தாதி, கலம்பக வகையருக்களிலும், முரச பந்தம், அஷ்டபந்தம், தசகாகபந்தம், ஆகிய சர்க்கஸ் பாடல்களிலும், சித்திர வித்தார கவித்துறைகளிலும் வந்து சலித்து கின்றுவிட்டது. அன்றையச் சூழ்கிலேயில் இருள்முற்றிய கலியைப் போலத் தமிழ்க் கவிதையே நம்பிக்கைக்குரியதல்லாத ஒர் இடத்தில் வங்து தேங்கி கின்று விட்டது. அப்போதுதான் கிருதயுகம் போல் பாரதி உதித்தான். சித்திர வித்தார முரச பக்த தசநாகபங்கங் களிலிருந்து தமிழ்க் கவிதையை விடுவித்துத் தேசிய சுதங். திர சமூக, சீர்திருத்த இலட்சியங்களில் புனேந்து, அழகு. படுத்தினன் பாரதி. கவிதைக்கு ஒரு புது இலட்சியத்தை எதிர்கால நன்னேக்குடன் (Optimistic) தனக்குத் தானே படைத்துக் கொண்டான் அவன்.

1. கதைகள் சொல்லிக் கவிதை எழுதென்பார்

காவியம்பல மீண்டன கட்டென்பார் வித்விதப்படு மக்களின் சித்திரம் -

மேவி நாடகச் செய்யுளே மேவென்பார் இதயமோ எனிற் காலேயும் மாலேயும்

எந்த நேரமும் வாணியைக் கூவுங்கால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/38&oldid=598020" இலிருந்து மீள்விக்கப்பட்டது