பக்கம்:புதிய பார்வை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 35.

யைச் செய்ய வேண்டியிருந்தது. இலக்கண நூல்களுக்கும், இலக்கியங்களுக்கும் விளக்கம் தர மட்டுமே வசனம் என்ற பாமர மொழியை அன்று உரையாசிரியர்கள் எனப்படு வோர் இன்றையப் பாட்டைவிடக் கடினமாகத் தோன்றும் இறுகிய கனமான செறிவுள்ள உரைநடையில் எழுதி வைத் தார்கள். இதைத் தவிர வசனம் அன்று மலிவான இலக் கியச் சாதனமாகவே கருதப்பட்டு வங்தது. வசனத்தில் எழுது வது அதிகம் திறமையில்லாத காரியம் என்றும் கருதப்பட்டு வந்தது. அதனுல்தான் கடுமையான திறமைக்குரியவை என்று கருதப்பட்ட அம்சங்கள் எல்லாம், சொல் முறை, வடிவம் ஆகிய சகல அம்சங்களாகவும் கவிதையில் புகுத்தப் பட்டன. மீதமுள்ள சாதாரணமான கடின நெறிகள் உரைநடையிலும் கடைப்பிடிக்கப்பட்டன. இதல்ை இந்த எல்லாக் காலத்துத் தமிழ்ச் செய்யுளும் தமிழில் புலமை உடையவர்களின் இரசனைக்கு மட்டுமே உரியனவாக இருந் தன. 'குடிமக்கள் சொன்னபடி குடி வாழ்வு” என்று பாரதி கிருதயுகத்தை வருணித்தானே அப்படிக் குடிவாழ்வு கவிதை இரசனையைப் பொறுத்தவரை குடிமக்கள் எல்லா ருக்கும் அன்று வழங்கப்படவில்லே. குடிமக்களும், அப்படி ஒர் எளிமை கவிதையிலே வேண்டுமென்று கோரவோ, முயலவோ இல்லை. புலவர்களும் முன்வரவில்லை. மன்னர் களின் பெருமைபாடும் செய்யுட்களும், அன்னவர்தம் குல முறை கிளத்தும் பிரபாவங்களுமாக இருந்த தமிழ்ச் செய். யுட்களில், சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, பெண்மை முன்னேற். றம், அடிமை ஒழிப்பு, ஆகிய சமூகப் பிரச்னைகளே ஏற்றிக் கவிதை இயற்றிய முதல் தமிழ் மகாகவி சுப்பிரமணிய. பாரதி ஒருவனே. அந்த வேளையில்தான் தமிழ்க் கவிதை யில் ஒரு கிருதயுகம் பிறந்தது. இதல்ை பாரதிக்கு முக்திய கவிதைகளைக் குறைத்துக் கூறுவதாகவோ, செய்யுட்களைப் பழித்துக் கூறுவதாகவோ யாரும் எண்ணி விடக்கூடாது. பெரும்பாலான குடிமக்களுக்கு அவை இருண்டிருந்தன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/37&oldid=598018" இலிருந்து மீள்விக்கப்பட்டது