பக்கம்:புதிய பார்வை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 புதிய பார்வை

பாரதி செய்த புதுமைகள் : பாரதியின் கவிதை நடை யில் நேருக்கு கேர் பேசுவதுபோன்ற தன்மை உண்டு என்பதை முன்பே கூறினேன். இந்த அபிப்ராயத்தையும் 'வெடிப்புறப் பேசு' என்று புதிய ஆத்திகுடியில் அவன் கூறியிருக்கும் வாக்கியத்தையும் இணைத்துச் சிந்தித்தால் இது புரியும். வெடிப்புறப் பேசும் தன்மையுடையவை அவனுடைய கவிதைகள். அவனுடைய நாட்டுப் பாடல் களிலும், தேசிய கீதங்களிலும் மூன்று படிப்படியான விரிவுகள் உண்டு. 'வாழிய செந்தமிழ்' என்று முதலில் தமிழ் மொழியையும் 'வாழ்க கற்றமிழர்' என்று இரண் டாவதாகத் தமிழ் மக்களேயும், 'வாழிய பாரத மணித்திரு நாடு” என்று மூன்ருவதாகப் பாரத காட்டையும் முறை வைப்புச் செய்து போற்றுகிருன் அவன். மொழி, இனம், நாடு ஆகிய சமுதாய அமைப்புக்களே மிகவும் பரந்த மனத் தோடு முறைப்படுத்துகிருன் அவன். "பாரத சமுதாயம்' என்ற கம்பீரமான பதச் சேர்க்கையே முதல்முதலாக இங்தப் பழம் பெருமைமிக்க தேசத்தில் பாரதி என்ற புதுக் கவிஞல்ைதான் அர்த்த கிறைவுள்ளதாக இக்ணக்கப் பட்டி ருக்கிறது. இந்தப் பதச் சேர்க்கையின் தேசியத் தன்மைக் காகவே இவனே ஆயிரம் தடவை வாய் கிறைய மகாகவி என்றும் தேசிய கவி என்றும் கூவிக் கொண்டாடி மகிழ் வேன் நான். தமிழனுக்குள் ஆயிரம் சாதி சமய பேதமிருங் தாலும் மொழியின் பெயரால் "தமிழச் சாதி” என்று எல்லாரையும் இணைக்கிருன் பாரதி.

"விதியே விதியே, தமிழச் சாதியை

என்செய நினைத்தாய் ? எனக்குரையாயோ?”

என்றல்லவா பாடுகிருன் அவன். தேசிய ஒருமைப்பாட்டுச் சிந்தனையோடு நோக்கும்போது "பாரத சமுதாயம்' "தமிழ்ச்சாதி” என்ற பதச் சேர்க்கைகளில் எவ்வளவு கவித்துவம் இருக்கிறது. பாருங்களேன். தெய்வ பக்தியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/40&oldid=598024" இலிருந்து மீள்விக்கப்பட்டது