பக்கம்:புதிய பார்வை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

期用。 பார்த்தசாரதி 55

வர்கள் கடைப்பிடிப்பதில்லை. கடைப்பிடிக்கிறவர்கள் பேசுவதில்லை. காங்தியையும் வள்ளுவரையும் புகழுவது ஒரு ஃபாஷனுகி வருகிறது. நோக்கம் புரிந்துக்கொள்ளப் படாமல் வெறும் வார்த்தையால் புகழப்படுவதும் பேசப் படுவதும் காகரிகங்களாகி வருகின்றன. கொல்லாமை, புலால் மறுத்தல், பொய்யாமை, இன்ன செய்யாமை, இனி யவை கூறல் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க முயல்வது புகழ்ந்து பேசுவதைவிடச் சிறந்த காரியம். இவற்றைப் பற்றிய சிங்தனைகளில் ஊருமல், கவி ஈயம் அனுபவிப்பதற் காக மட்டும் குறளேப் படிக்கிறேன் என்று ஒருவன் சொல்லி விட முடியாது. அனுபவத்துக்குரிய நூல்கள் வேறு, போற்றி மேற்கொள்ளற்குரிய நூல்கள் வேறு என்று தரம் பிரித்துப் படிக்கவும், கடைப்பிடிக்கவும் கற்றுக்கொள்ளவும் வேண்டும். அப்போதுதான் நூலின் கோக்கத்தைப் பற்றிய தெளிவு ஏற்படும்.

நம்பிக்கையும், விகிதாசாரமும்

அற நூல்களேப் பொறுத்தமட்டில் நூறு சதவிகித நம்பிக்கைதான் பயனளிக்குமே ஒ ழி ய, விகிதாசார கம்பிக்கை நிச்சயமாகப் பயன் அளிக்காது. இன்று காடு முழுவதும் எல்லா நல்ல காரியங்களிலுமே. விகிதாசார கம்பிக்கைதான் வைக்கிருர்களே ஒழிய, நூறு சதவிகித நம்பிக்கை என்பது பலருக்குச் சாத்தியமாயிருப்பதில்லை.

எனக்கு அகிம்சையில் கம்பிக்கையில்லை. ஆலுைம் காந்தியைப் போற்றுகிறேன்.' -

"எனக்கு மதுவிலக்கில் - நம்பிக்கையில்கல. శిఅ லும் காந்தியத்தில் நம்பிக்கை உண்டு.” -

திருவள்ளுவரைப் பிடிக்கும். ஆனல் அவர் கூறுகின்ற பலவற்றைக் கடைப்பிடிக்க முடியவில்லை.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/57&oldid=598058" இலிருந்து மீள்விக்கப்பட்டது