பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 பல வகையாகும். இவற்றில் ஒன்று தவறல்ை, மொத்தப பொருளாதார நிலையே கவிழ்ந்துவிடும். தொழிலிலே அதிகமாய்க் கவனம் செலுத்தி விவ சாயத்தைப் புறக்கணித்தால், தேசம் கஷ்டங்களில் சிக்கிக்கொள்கின்றது. கிழக்கு ஐரோப்பிய காடுகள் சிலவற்றில் சில உள்-முரண்பாடுகளும் பொருளாதாரக் கஷ்டங்களும் இருந்தன, இந்த நாடுகளின் பொரு எாதாரம் சமரசப்படுத்தப்பட்ட ஏகோபித்த நிலை யன்று, தொழிலை விரைவில் அபிவிருத்தி செய்வதில், முக்கியமாகக் கனரகத் தொழிலை விருத்தி செய்வதில், அளவுக்கதிகமாக வற்புறுத்தப்பட்டு வந்தது. இதல்ை விவசாயம் கஷ்டத்திற்கு உள்ளாயிற்று. அதிலிருந்து பொருளாதார அமைப்பும் பாதிக்கப்பட்டது. -இந்துரில் அ. இ. காங்கிரஸ் கமிட்டியில் ஆற்றிய சொற்பொழிவு, 4-1-57.

  • - o:

மூன்ருவது ஐந்தாண்டுத் திட்டம் பற்றிய பரிசீலனை விவசாயத் துறையில் விளைவு ஏமாற்றத்தை அளித்தபோதிலும், திட்டத்தின் முழுச் சித்திரத்தை யும் கவனித்தால், எனக்குக் கலக்கம் ஏற்படவில்லை; மின்சார உற்பத்தி, தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. பிற்கால அபி விருத்திக்கு உறுதியான அடிப்படை போடப்பெற் றுளது. குறை கூறுபவர்கள், அரசாங்கம் சரித்திரத் திலே ஈடாகச் சொல்ல முடியாத மாபெரும் வேலையை மேற்கொண்டிருப்பதை, மதிப்பிட்டுப் பார்க்க வேண் டும். இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு மேலான ஒரு வாழ்க்கையை அமைப்பதே அந்த வ்ேலை. திட்டமிடுவதன் மூலம், பல ஆண்டுகளாகப் பொருளாதாரத்தில் தேக்கமடைந்து கிடந்த நிலைமை