பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 போரும் பலாத்காரமும் இந்திய அரசாங்கத்தின் கொள்கை நமது அரசாங்கம் அஹிம்சையைக் கைக் கொள்ள உறுதி பூண்டுள்ளதா என்று ஆசாரிய கிருபலானி நேரான ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார். அதற்குப் பதில் இல்லை என்பது, அரசாங்கம் அப்படி உறுதி கொள்ளவில்லை. தற்போதைய சூழ்நிலைகளில் எந்த அரசாங்கமும் அஹிம்சை விரதத்தைக் கடைப் பிடிக்க முடியும் என்று என் அறிவுக்கு எட்டியவரை யில் தோன்றவில்லை. நாம் அஹிம்சைக்குக் கட்டுப் பட்டிருந்தால், நாம் எவ்விதமான படையையோ, கடற்படையையோ, விமானப் படையையோ நிச்சய மாக வைத்திருக்க மாட்டோம்-போலீஸ் படை கூடத் தேவை யில்லாமற் போகும். அது எனக்குத் தெரியாது. ஒருவர் ஒர் இலட்சியத்தைக் கொண் டிருக்கலாம். ஒருவர் கடைமுறையில் ஒரு கொள்கைப் படி, ஒரு திசையில் முன்னேறிச் சென்று கொண்டிருக் கலாம். எனினும், தற்போதைய சூழ்நிலைகளில், அந்த இலட்சியத்தைச் செயற்படுத்த முடியாம லிருக்கலாம். அதற்கு நாம் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். ஜெர்மானியப் படைகளை எதிர்த்துப் போலந்து போர் புரிந்ததைக்கூடச் சத்தியாக்கிரகம் என்று சொல்ல லாம் என்று மகாத்மா காந்தி கூறியதை எடுத்துக் காட்டி, ஆசாரிய கிருபலானி ஞாபகப்படுத்தினர். கொள்ளைக் கூட்டத்தாரிடமிருந்து காஷ்மீரைக் காப் பாற்ற இந்தியப் படை காஷ்மீருக்குச் சென்றதைக் காந்திஜி ஆதரித்ததுடன் ஊக்கப்படுத்தவும் முன்