பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 சாலையிலும் பட்டம் பெற்று, கான் திரும்பி வந்து 10-ஆண்டுகள்கூட ஆகவில்லை. ஹாரோ, கேம் - பிரிட்ஜ் நகரங்களில் தங்கியவர்களுக்கு ஏற்படக் கூடிய ஒருதலைப் பட்சமான கருத்துக்கள் பலவும் எனக்கும் ஏற்பட்டன. என்னுடைய விருப்பு, வெறுப் புக்களில் நான் ஒர் இந்தியனுக இருந்ததைவிட, ஆங்கி லேயனகவே அதிகமாக இருந்தேன். ஆங்கிலேய னுடைய கண்ணுேட்டத்திலேயே நான் உலகத்தைக் கவனித்து வந்தேன். எனவே கான் இந்தியாவுக்குத் திரும்பி வருகையில், ஒர் இந்தியல்ை எவ்வளவு முடி யுமோ, அந்த அளவுக்கு இங்கிலாந்தினிடத்திலும் ஆங்கிலேயரிடத்திலும் அதிக மோகம் கொண்டிருக் தேன். பத்து ஆண்டுகள் கழிந்து, இன்று கான் கைதிக் கூண்டில் கிற்கிறேன். என் மீது இரண்டு குற்றங்கள் சாட்டப் பெற்றிருக்கின்றன. மூன்றவது குற்றமும் பின்னணியில் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது.நான் ஒரு பழைய கைதி, ஒர் அரசியல் குற்றத்திற்காக முன்பு ஒரு முறை சிறை சென்ற பழைய கைதி, இந்தி யாவில் இப்பொழுதுள்ள அரசாங்கத்தின் எதிரி நான். இத்தனை ஆண்டுகளில் எனக்கு ஏற்பட்டுள்ள மாறுதல் இது. இந்த மாற்றத்திற்குரிய காரணங்களை நான் எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியமில்லை. அவை க2ளப் பற்றி ஒவ்வோர் இந்தியனும் அறிவான்; ஒவ் வோர் இந்தியனும் அவைகளை அநுபவத்தில் உணர்க் திருக்கிறன். அவைகளுக்காக அவமானத்தால் தலை குனிந்திருக்கிறன். இந்தியனுக்குரிய பழைய அனலில் அவனிடம் ஒரு பொறியேனும் எஞ்சியிருந்தால், அடிமை வர்க்கத்தாருக்கு ஏற்படும் துயரங்களையும் அவமானங்களையும் இனி எக்காலத்திலும் தன் காட்டு மக்கள் அடையாதிருக்கும்படி, இந்தியாவின் சுதர்