பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 லிச் சிறை அதிகாரி அவர்களை விடுதலை செய்து விட்டார். நான்காவது விசாரணை 1930-ல் மகாத்மா காந்தி உப்பு சத்தியாக்கிரகத் தைத் தொடங்கி கடத்தியது உலகப் பிரசித்தமான வரலாருகும். ஆமாதாபாத்திலிருந்து, எழுபத்தைந்து தொண்டர்களுடன், 200-மைல் நடந்து, தண்டி கடற் கரைக்குச் சென்று, அங்கே உப்பை அள்ளினர் மகாத்மா. அது முதல் இயக்கம் நாடெங்கும் காட்டுத் தீ போல் பரவி விட்டது. பல்லாயிரக்கணக்கில் தொண்டர்களும் மக்களும் காட்டில் அரசாங்கத்தின் உப்புச் சட்டத்தை மீறினர்கள். நேருவும் அலகாபாத்தில் ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொண்டர்களுடன் சேர்ந்து பாறையிலிருந்து உப்புத் தயாரித்தார். இதற்காக அவர் கைது செய்யப் பெற்று, ாைனி சிறையில் அடைக்கப்பெற்றர். அங் கேயே விசாரணையும் கடந்தது. உப்புச் சட்டத்தை மீறியதாக அவர்மீது குற்றம் சாட்டப் பெற்றது. மாஜிஸ்திரேட், நீங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்களா, அல்லது மறுக்கிறீர்களா ? என்று வினவிஞர். கேரு : இந்த விசாரணையில் எந்தச் சமயத்தி லும் கான் கலந்துகொள்ள விரும்பவில்லை. விசாரணை ஒருபுறமிருக்க, கான் பல தடவைகளில் சொல்லி யிருப்பதை உங்கள் தகவலுக்காகவும் சொல்லத் தயாரா யிருக்கிறேன்-கான் வேண்டுமென்றே உப்புச் சட்டத்தை மீறியுள்ளேன்.