பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33O ஒன்பதாவது சிறைவாசம் 1941-ல் சிறையிலிருந்த சத்தியாக்கிரகிகள் பலரை அரசாங்கம் விடுதலே செய்கையில், கேருவும் வெளியே வந்தார். ஐரோப்பாவில் போர் கடந்து கொண்டிருந்த துடன், கீழ்த்திசையில் ஜப்பானும் நேச நாடுகளுக்கு எதிராகப் போர் தொடுக்கலாயிற்று. எந்த கேரமும் ஜப்பான் இந்தியாமீது படையெடுக்கலாம் என்ற கிலேமை ஏற்பட்டது. அந்த நேரத்திலும்கூட இங்கி லார்து இந்தியாவுக்கு உரிமை வழங்கி, காட்டைப் பாதுகாக்கும் பொறுப்பைத் தேசத் தலைவர்களிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டது. காட்டிற்குச் சுதந்தரம் கிடைத்து, பிரிட்டிஷ் வைசிராய் சுதந்தர இந்திய அரசாங்கத்திற்குக் கட்டுப்பட்டு ாகடக்கவேண்டும் என்று காங்கிரஸ் மகாசபை கோரிற்று. அதற்குப் பிரிட்டிஷ் அரசு இணங்காத நிலையில், நாடே கொந்த ளித்துக் கொண்டிருந்தது. காந்திஜி 1942-ல் இந்திய சுதந்தரத்திற்கான இறுதிப் போரைத் தொடங்க ஆயத்தமானர். 1942, ஆகஸ்ட் மாதம் 8-தேதி பம்பாயில் கூடிய அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் கூட்டத்தில் மகாத்மா தலைமையில் மீண்டும் சத்தியாக்கிரகப் போரைத் தொடங்கத் தீர்மானம் செய்யப் பெற்றது. அந்தக் கூட்டத்தில் மகாத்மா 140-நிமிடங்கள் ஆற்றிய வீரச் சொற்பொழிவு பொன்னெழுத்துக் களில் பொறிக்கத் தக்கவை. வெள்ளேயரை உடனே ஒவெளியேற்ற வேண்டுமென்று போர் முரசு கொட்டப் இல்றது. செய்யுங்கள், அல்லது செத்து மடியுங் இளூல் என்ற வீர முழக்கத்தைக் கார்திஜி எழுப்பிச் தம் செய்துவிட்டார்.