பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 ஜனநாயகத்தைப் பற்றி அவர் எவ்வளவோ சொல்லி யிருக்கிருர். இன்றும் நம் நாட்டினர் சுயக்கட்டுப்பாட்டின் அவசியத்தை உணராமலே செயற்படுகின்றனர். தனி மனி தன். மனம்போன போக்குகளிலெல்லாம் நடந்து கொள்ள லாம்: என்று, ஜனநாயகத் துக்குப் பொருள்-கொள்கிருன். இதல்ை அதன் கட்டுக்கோப்பு வலிமையிழந்து சரிந்துவிடும். நேருஜி கூறுகிருர்: ஜனநாயகம் தனிமனிதன் வளர்ச்சியடை வதற்கு வாய்ப்பை யளிக்கிறது எனலாம். அந்த வாய்ப்பை ஒவ்வொரு மனிதனும் தன் இஷ்டம்போல் திரிவது என்ற அராஜகமாகக் கொள்ள முடியாது. சமூகஸ்தாபனம் எதுவும் அது உலேந்து விழுந்து விடாமல் நிற்பதற்குச் சில ஒழுங்கு முறைகளைப் பெற்றிருக்க வேண்டும்.' -- நேருஜியின் சோஷலிஸக் கருத்துக்கள் பல இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. நாற்பதாண்டுகளுக்கு முன்னரே அவர் சோஷலிஸத் தத்துவங்களை ஆதரித்து வந்திருக்கிரு.ர். 1929-ல் லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் தலைமைப் பிரசங் கத்தில் அவர் கூறியிருப்பதாவது: "சமுதாய சுதந்தரமும், சோஷலிஸ்ட் முறையில் அமைந்த சமுதாயமும், அரசாங்கமும் இல்லாமல், தேசமோ, தனிமனி தனே அதிக வளர்ச்சியடைய முடியாது.” "நான் ஒரு சோஷலிஸ்டு என்பதையும், குடியரசுக் கொள்கையுடையவன் என்பதையும் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறேன்.' 'உலகம் முழுவதிலும் மனித சமுதாய அமைப்பில் சோஷ லிஸத் தத்துவம் படிப்படியாக ஊடுருவிப் பாய்ந்திருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்; அதை எவ் வளவு வேக்த்தில் அடையலாம் என்பதிலும், முன்னேறிச் செல்வதற்குரிய வழி முறைகள் என்ன என்பதிலுமே கருத்து வேற்றுமைகள் இருக்கின்றன. இந்தியா தனது வறுமையை யும், ஏற்றத்தாழ்வுகளையும் ஒழிக் ைவிரும்பினால், அந்த வழியிலேதான் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் அது அந்த லட்சியத்தைத் தன் மேதைக்குரிய முறையில் அமைத்துக் கொண்டு, தன் சொந்த வழிகளையும் வகுத்துக் கொள்ளும்.'