பக்கம்:புதிய புத்தகங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பொருளாதார முன்னேற்றமே உரைகல் கான் முன்பு (22 ஆண்டுகளுக்கு முன்பு) எழுதிய தைத் திரும்ப இங்கே சொல்லுகிறேன் : ஜனநாயகம் பொருளாதார ஜனநாயகமாக மாறமல் வெறும் அரசி யல் ஜனாாயகமாக மட்டும் இரும்தால், அது பூரண மான ஜனகாயகமாகாது. பல ஜனங்கள் அரசியல் ஜன காயகம் என்ற உடைக்குள் மறைந்து கொண்டு மற்ற முன்னேற்றங்களை யெல்லாம் தடுக்க விரும்புகின்ற னர். அரசியல் ஜனாகாயகத்தைப் பற்றிப் பேசும் பொழுது, வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்ற முறை மேலை நாடுகளிலேகூடச் சமீப காலத் திலேதான் ஏற்பட்டது என்பதை நாம் நினைவில் வைத் துக் கொள்ள வேண்டும். அரசியல் ஜனாாயகம் செல் வம் மிகுந்த குறிப்பிட்ட இனத்தார்களுக்கே அநுகூல மானது என்ற வாதம் சிலருக்கு மட்டுமே வாக்குரிமை ஏற்பட்டிருந்த காலத்திற்குப் பொருத்தமா யிருந்தது. ஒரு காட்டில் சர்வ ஜன வாக்குரிமை இருக்கும் பொழுது, அது அவ்வளவு பொருத்தமான வாத மன்று. நாம் உண்மையிலே எதிர்நோக்க வேண்டிய பிரசினே பொருளாதாரத் துறையில் காம் செய்ய நினைக்கும்மாறுதல்களை, ஜனகாயகமுறையில், அமைதி யாகச் சாதிக்க முடியுமா, இல்லையா என்பதுதான். அரசியலில் ஜனநாயகம் முறையாக அமலுக்கு வர வில்லையானல், பலாத்காரம் அல்லது புரட்சி மூலமான கட்டாயத்தின் பேரிலேயே மாறுதல் செய்ய முடியும். ஆனல் அமைதியான முறைக்கு இடமிருக்கும் பொழுது, வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை உள்ள இடத்தில், பலாத்காரத்தின் மூலம் மாறுதலை ஏற்படுத்தல் என்பது ககைப்புக்கிடமாகும், முற்றிலும் தவருகும், சிறுபான்மையாயுள்ள ஒரு கூட்டத்தினர்