பக்கம்:புதையலும் பேழையும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும்

தாத்தா:

தா :

தா :

எளி :

99

வேண்டாம் விடு. மரம் ஏற வேண்டாம். நடக்கும் வழியில் புல் முளைத்திருக்கும். பக்கத்தில் ஆ இனம் மேயும். அதற்குப் புல்லில் ஒரு வாய் போடு, எளிதானதுதானே? -

குணிய வேண்டும்; பிடுங்க வேண்டும்; நிமிர வேண்டும்; முட்டாத மாடாகப் பார்க்க வேண்டும்;

முடியாது.

வேண்டாம். நீ உணவு உண்பது உண்டன்றோ? சோறு கிடைத்து உண்ணும்போது ஒரு கைப்பிடி சோறு இல்லாதவருக்கு இடு. இஃது எளிதில் ஆகக் கூடியதுதானே?

தாத்தா! என் பாட்டனார் 'எச்சிற் கையாற் காக்கை ஒட்டாதவர். நான் ஈரக்கையால் ஈ விரட்டாதவன்’ மகன். எங்கள் உடைமையைப் பிறர்க்கு ஈவது என்பது எங்கள் தலைமுறைப் பகை. அதைச் செய்ய மாட்டேன். அப்படிச் செய்து எங்கள் குலத்திற்குப் பழி தேட மாட்டேன்.

அப்படியா! வாய் திறந்து பேசுவாய் அன்றோ? அவ்வாறு பிறருடன் பேசும்போது இனிய சொற் களைக் கூறு. இதில் முயற்சி இல்லை. மிக எளிது

இஃதும் முயற்சி உடையதுதான். வாயைத் திறக்க வேண்டும். பல்லில் நாவை வைத்துத் தொண்டை ஆவியைப் போக்கி அன்றோ பேச வேண்டும்! அதனிலும் இனிமை வேண்டும் என்கிறீர். தாத்தா, என்னால் செய்யக் கூடியது அன்று உமது அறிவுரை.

அயர்ந்து போன அந்தப் பெரியவர் திருமூலர் :

பேரா! இவை முடியாதன என்றால் நட! கால்களால் அன்று; மனத்தால் நட! மேலுமோர் ஆயிரம் ஆண்டு கள் பின்னோக்கி நட! எம் முன்னோர் ஒருவரைக் காண்பாய். உனக்கேற்பன கூறுவார்; போ!

(எளியவன் புறப்பட்டான்.)

திருமூலர் :

பேரா! எதற்கும் இந்தப் பாடல் உன் உள்ளத்தில் இருப்பதால் குறையில்லை. நினைவிற் கொள்க!