பக்கம்:புதையலும் பேழையும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 - புதையலும்

"யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை, யாவர்க்கு மாம்பசு விற்கொரு வாயுறை, யாவர்க்கு மாம்.உண்ணும் போதொரு கைப்பிடி: யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே!"

-என்றார்.

இவற்றினும் எளிமையானதை நாடிய எளியவன் ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி நடந்தான். -

திருவள்ளுவர் எளிமை.

திருவள்ளுவப் பெருந்தகையைக் கண்டான்; கேட்டான்:

தந்தையே! எளிதாகச் செய்யத்தக்க அறம் ஒன்றை அருளுக. - -

வள்ளுவர் : மகனே! அறமே எளியதுதானே. உள்ளத்தில் குற்றம் இல்லாதிருத்தலே அறம். அவ்வளவுதான் அறம். இந்த அறத்தினைக் கொள்க; செய்க!

எளி தந்தையே உள்ளத்தில் குற்றமில்லாமல் இருப்பதா? முன்னர் யான் கேட்டவற்றைவிட இது எளிதுதான் ஆனால், மனத்தைத் து: ண்டிச் செயல்புரியச் செய்வது என்பது அத்துணை எளிதாகக் கூடியது அன்று. இதைவிட எளிதாக ஏதேனும் உண்டோ?

திரு: (புன்னகை பூத்தவாறே) மகனே! இதைவிட எளி தானது கிடைத்தால் செய் கிடைக்காது போனால் மீண்டும் வா! - - -

மிகச் சோர்ந்துபோன எளியவன் மனத்தால் காலத் தை முன் நோக்கித் திரும்பினான். வழியில் தாயுமானவரைக் கண்டான்; வினவிப் பார்த்தான். . . . .

1 திருமந்திரம் : 252