பக்கம்:புதையலும் பேழையும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 புதையலும்

யுள்ளார். இம்மனைகளில் ஒப்பனைகள் செல்வ நிலைக்கேற்பப் பெருகின.

இத்தகைய மாளிகைகள் வளமனைகள். இப்பெரு மனை களின் உள்ளே எத்துணை பகுதிகள்! அட்டில், கொட்டகாரம், பண்டசாலை, கூடகாரம், பள்ளியம்பலம், உரிமையிடம், கூத்தப் பள்ளி என அடுத்தடுத்து அமைப்புகள் இருந்தன. இதனை இறையனார் அகப்பொருள் உரை (நூற்பா 21) காட்டுகிறது. இவற்றுள் அட்டில் = சமையற்களரி கொட்டகாரம்-பண்டசாலைசரக்கறை. கூடகாரம்-மேல்வீடு பள்ளியம்பலம் - படுக்கையறை: கூத்தப்பள்ளி - கலையறை.

ஒரு திண்ணையைச் சிலப்பதிகாரம் பின்வரும் கருத்தில் வண்ணிக்கின்றது.

'மரகத மணியும் வயிரக் கல்லும் அழுத்திப் பதித்த ஆயப்பலகை அதன்மேல் பவளத்தால் திரண்டெழுந்த தான். பசும்பொன் பட்டை பெற்ற திண்ணை மேடை! -இவ்வகைச் செல்வச் செழிப்புடன் எழுந்த மனை - வளமான முனை, மாளிகை எனப் பெயர் பெற்றது. இத்தகைய மாளிகை யின் வாயிலில்,

பொன்பூண் கட்டிய யானைத் தந்தங்கள் இணைக்க பட்டு, ஒளிவிடும் பருத்த முத்து மாலைகள் தொங்க விடப்பட்டு, மங்கலம் பொறித்த மகர தோரணம் மாலை களாக வளைவில் கட்டப்பட்டனவாம்'2

இவ்வகை மாளிகை நெடுநிலை மாளிகை’ எனப்பட்டது,

இம்மாளிகைகளின் முகப்புகள் கண்கவர் சிற்பங்களைக் கொண்டு விளங்கின. அச்சிற்பங்கள்,

1. "மரகத மணியொடு வயிரங் குயிற்றிப்

பவளத் திரள்கால் பைம்பொள் வேதிகை நெடுநிலை மாளிகை;

2. கடைமுகத்தி யாங்கணும்

கிம்புரிப் பகுவாய்க் கிளர்முத் தொழுக்கத்து மங்கலம் பொறித்த மகர வாசிகை ** " ×。 * * . . . . ." சிலம்பு : இந்திர : 147-151.