பக்கம்:புதையலும் பேழையும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 129

பட்டிருந்தன. வாயில்கள் யானைத் தந்தங்கள் அணிசெய்யப் பட்டு மகர வாசிகைகள் இடம் பெற்றிருந்தன. பலகணிகளில் மாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. பல்வகை இசைக்கருவி கள் இருந்தன. யவனர் நாட்டினின்றும் வந்த அழகிய பாவை விளக்குகளும் இரும்பு விளக்குகளும் ஆங்காங்கே இடம்பெற்றிருந் தன. மகளிர் பந்தாடும் சிற்றிடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

பெறற்கரும் சிறப்பின் துறக்கம் (வீட்டுலகம்)

ஏய்க்கும்

.. ... ... நெடுங்கால் மாடம்' என்று பட்டினப் பாலை (104, 111) பாடும் அளவில் வீட்டுலகமே (சுவர்க்கம்) போன்று இன்பக் கொள்கலமாய் எழுநிலை மாடம் அமைக்கப் பட்டிருந்தது. -

பிற்காலத்து வள்ளலார் இராமலிங்க அடிகளும் இவ் ஏழு நிலைமாடத்தைக் குறித்து வியந்து பாடியுள்ளார். பொன்னம்பலக் காட்சியை காணும் அவர் அப்பொன்னம்பலத்தை எழுநிலை மாடத்தின்மேல் கண்டாராம். எவ்வாறு கண்டாராம்?

'ஒளிமலை ஒன்றின்மேல் வீதி உண்டாச்சுது - வீதி நடு வொரு மேடை இருந்தது - மேடை மேல் அங்கொரு கூடம் இருந்தது',

"கூடத்தை நாடஅக் கூடம்மேல் ஏழ்நிலை

மாடம் இருந்ததடி - அம்மா - மாடம் இருந்ததடி;

ஏழ்நிலைக் குள்ளும் இருந்த அதிசயம். என்னென்று சொல்வேனடி - அம்மா - என்னென்று சொல்வேனடி -என ஏழ்நிலை மாடத்தைக்கண்டு வியக்கின்றார் அந்த ஏழ்நிலை அடுக்கு ஒவ்வொன்றிலும் ஒன்பது மணி ஒளிகள் முறையே உயர்ந்து உயர்ந்து ஒளிர்வதாக வியக்கின்றார். இவ்வாறு பாடப்பட்ட பாடல் உடம்பையே பொன்னம்பலமாகக்

கண்ட நுண்பொருள் கொண்டது. இக்கருத்துடனேயே