பக்கம்:புதையலும் பேழையும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 புதையலும்

அதோ பெரிய கட்டில் கிடக்கின்றது. மேலே மிக மென் மையான அமளி (மெத்தை) கிடக்கிறது. தொட்டால் மாவில் கைவைத்தது போன்ற மென்மை எப்படி வந்தது? காரணம் உள்ளே பஞ்சு அடைக்கப்படவில்லை. பஞ்சு குளிர் ஈரத்தை வாங்கிக்கொள்ளும் அன்றோ? அதனால், இரண்டு அன்னங்கள் புணர்ந்த போது உதிர்ந்த தூவி (அடிப்புற இறகு) இறகு களை உள்ளே அடைத்துள்ளனர். மென்மைக்கு மென்மை; ஈரத்தையும் வாங்காது. இயற்கை வெதுவெதுப்பை உடையது.

"துணைபுணர் அன்னத் து நிறத் துவி'

(நெடுநல்வாடை 132)

என்புருகி மிக்க அன்போடு (அன்னங்கள்) புணர்தலின் சூட்டிற்கு (அடிவயிற்று இறகிற்கு) மென்மை பிறக்கும் என்பது தோன்ற துணைபுணர்அன்னத் து நிறத்துவி என்றார்"

- என்று நச்சினார்க்கினியர் எழுதிய உரை விளக்கம் மென்மைக்குக் காரணத்தைக் காட்டு கின்றது.

அன்னங்கள் புணர்ந்த சின்னம் என்பதிலே இக்காதல் துன்னங்களுக்கு ஒரு புத்துணர்வு எண்ணம் ஏற்படும் போலும். இப் படுக்கை மேல் கஞ்சி தோய்ந்த மெல்லிய ஆடை படித் துள்ளது. தடித்ததும் நீர்க்கோப்புகள் இல்லாததுமான இதழ் களையுடைய மெல்லிய சருகுபோன்ற மலர்கள் இதோ உள்ளன. அவையும் சிலவே. ஏனெனில், கூதிர்க் குளிரில்,

'கூந்தல் மகளிர் கோதை புனையார்

பல்லிருங் கூந்தல் சின்மலர் பெய்'து கொள்வர்.

கார்ப்பருவப் பள்ளியில் உள்ளமை போன்று சுண்ணப் ஆாடிகள் நிறைந்த சிமிழ்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒப்பனை செய்துகொள்ளும் போது உருவத்தைக் காட்டும் பளிங்கு ஆடிகள் உள்ளன. கண்ணப் பொடிகள் இக்கால முகத் ஆளி (Face Powder) பேன்ாறவை. அவற்றைப் பீச்சுக் குழலில் _த்துப் பீச்சி உடலில் படியவிடுவர். ஈரக் குழம்பான மணப் பூச்சுகள் இல்லை. .

س-سم سحم- سمت -...م. مراسم ۰۰۰-مجسمه سید حسب مس.

1 நெடு வா : 58, 54.