பக்கம்:புதையலும் பேழையும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 141.

மயிர்க் கம்பலங்கள் உள்ளன. தடித்த நீலநிறப் பட்டாடை கள் பேழைகளில் உள்ளன. மாணிக்க மணிகள் பொருந்திய மேகலைகள் உள்ளன. அதோ அந்த மூலையில் வாய் குறுகிய தண்ணிர்க் குடுவை உள்ளது. பெயருக்குத்தான் அஃது அங்கே. உள்ளது. கடுங்குளிரில் தண்ணிய நீரையோ பருகுவர்? "யாவரும் தொகுவாய்க் கன்னல் (குடுவை) தண்ணிர் உண்ணார்' என்கிறது நெடுநல்வாடை (65). ஆனால், அதோ அம் மூங்கில் குடுவையில் மெழுகால் பூசி மூடிய பழைய தேறல் தேன்) உள்ளது. அது நாள்பட்ட தேன். நாக்கில் வைத்தால் தேள் கொட்டியது போன்று குளிரெல்லாம் பறக்கும். இத்தகைய தேனைத் தேள்கடுப்பு அன்ன நாள் படு தேறல்’ என்கிறது புறநானூறு (392). அந்த வண்டுகள் மொய்த்த தேனை ஆவ லோடு பருகினால் புத்துணர்ச்சி பெருகும். அதனால், குளிர் பெரிதாகத் தோன்றாது.

இத்துணை நேரம் இங்கிருந்தோமே குளிர் தெரிந்ததோ? ஏன் தெரியவில்லை? அதோ அந்த மூலையை நோக்குக! மூலையை மறைத்து ஒரு துணித் திரை தொங்குகின்றதன்றோ? அதற்குத் 'தடவுத் திரை’ என்று பெயர். அந்தத் திரைமறைவில் பெரிய சுடுமண் தடா - தடவு - சால் இருக்கிறது. அங்கு ஒர் ஏவற்பெண் அமர்ந்து நெருப்பை மூட்டுவதற்கு மயிர்ச் சந்தன விறகைப் பயன்படுத்துகிறாள். அவ்விறகு தொட்டால் தண்னென்று குளிர்ச்சியாக இருக்கும். சூடு பிடித்தால் மணக் கும். தீப்பிடித்ததும் தடாவில் வைரம் பாய்ந்து முற்றியதாய்க் கருமை நிறமுள்ள அகிலையும், கண்டுசருக்கரை (அயிர்) என் னும் மணப்புகைப் பொருளையும் இட்டு வைத்துள்ளாள்.

'தண்ணரும் தகர முளரி நெருப்பமைத்து

இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்ப” -என்று நெடுநல்வாடை (55, 56. குறிப்பதை இங்கே கண்ணாரக் காணலாம். சாலிலிருந்து எழுந்த வெப்பம் மணப்புகையுடன் பரவுகிறது. அத் தடவுத் திரை புகையையும் வடிகட்டி வழங்குகின்றது. அதோ ஏவற்பெண் எழுந்துவிட்டாள்.

'. 'வண்டு முசு தேறல் மாந்தி மகிழ்சிறந்து .

து வலைத் தண்டுளி பேணார்' -நெடு, வா : 83, 84,

2 நெடு, வா : 55. ேே