பக்கம்:புதையலும் பேழையும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 159

அத்தி மரம் - வீரர் உடல்; குத்திய ஆணி - பாய்ந்த வேல்; வடிந்த பால் - வடிந்த குருதி, மரச் சிதைவு - குழிப் புண்; காய்ந்த இடம் - ஆறித் தோன்றிய வடு.

இவ்வாறு நேருக்கு நேர் உவமையை விரித்துப் பொருத்திக் காண்பது போன்று நேருக்கு நேர் வெளிப்படையாக அன்றி, உள்ளீடாக விளையும் கருத்தையும் விரித்துப் பொருத்தலாம்.

அத்திமர உவமையின் உள்ளிட்டுக் கருத்துகள் யாவை?

அத்திமரத்துப் பாலால் பாதரசத்தைச் சாம்பல் தூள் போன்று ஆக்கலாம். வேல் பாய்ந்து குருதியால் கிளர்ந்தெழுந்த வீரனது வீர உணர்வு பகைவரது தாக்குதலாம் பாதரசத்தை துாசித் துாளாய் முறியடித்ததாக விரிவாக்கலாம். இங்கே அத்திப் பால் நேரே பாதரசத்தோடு கலந்து தூசி ஆனது போன்று. குருதி நேரே பகைவருடன் கலந்து தாக்கியதாகக் கொள்ளமுடி யாது. இது நேர் பொருத்தமன்று. குருதி வெளிப்பாட்டின் விளை வால் நேர்ந்த விளைவுப் பொருத்தம்.

- அத்திப்பால் பலவகைப் பிணிகளையும் போக்க வல்லது. இதனை மருத்துவ நூல்கள் குறிக்கின்றன. அதுபோன்று குருதி வெளிப்பாட்டில் வீரம் பொங்கி விளைந்து, வெற்றி தந்து, அவ் வெற்றியால் மன்னனது மனக் கவலையாம் பிணியைப் போக்கும்; மக்கள் தம் அடிமையாம் பிணியைப் போக்கும்.

இவ்வழியில் தோயன்மாறன் விழுப்புண் வடுக்களைக் கொண்ட உடம்பிற்குக் காட்டப்பட்ட உவமையாகிய, மருந்து கொள்ளப்பட்ட மரத்தின் தன்மைகளை விரிவாகக் காணலாம். கண்டு, மாறனது சிறப்பியல்புகளின் பயன்களை விரிவாக உணரலாம்.

இதனால் இரண்டு பயன்கள் விளையும். ஒன்று மருத்துவப் பயன்; மற்றொன்று இலக்கியப் பயன்.

- மருந்துக்குப் பயன்படும் மரங்கள் பல. அவை மக்களுக்கு எளிதாகக் கிடைத்தலே நலம். இந்நாளிலும் எளிதாகக் கிடைக்கும் மருந்து மரங்கள் ஒதி, பூவரசு, நாவல், இலந்தை,