பக்கம்:புதையலும் பேழையும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

வணங்கி மகிழ்கின்றேன்.

இலக்கியங்களின் இலக்குகளை - நுண்ணிய கருத்துகளை வெளிக்கொணர ஆழத் தோண்ட வேண்டும் ஆம், ஆழ்ந்து ஆராய வேண்டும் ஆராய் வில் அரும்புதையல் கிடைக்கும்; பொன்மணிகள் தோன்றும். -

- நாட்டுப் புதையல், உழும்போதும் வெட்டும் போதும் எதிர்பாராமல் கிடைப்பது. ஏட்டுப் புதையல், இருக்கும் இடம் தேர்ந்து வேண்டுகைச் சூழலில் அகழ்ந்தெடுப்பது. பேழை, விலைக்களத்தில் கிடைக் கும். இப்பேழை இன்றியமையாத வேண்டற்பாட்டின் போது தோண்டிக்கண்ட பொன்மணிக்காக வனையப் படுவது.

தமிழ்நாட்டில் பாடு (பிரச்சினை) அடிக்கடி நேர்வது வாடிக்கை. வேண்டும் பாடும் நேரும்; வேண்டாப்பாடும்நேரும். தமிழரது மேம்பட்டகட்டிடப் பாங்கு எது? கண்ணகியார் கோட்டம் எது? இவை வேண்டும் பாடுகள். சிலப்பதிகாரம் கற்பனைக் காப்பியம், தமிழ்நாட்டில் தமிழில் வழிபடுவதா? இவை வேண்டாப்பாடுகள். வேண்டும் பாட்டிற்கு ஊட்டத்தையும், வேண்டாப் பாட்டிற்குக் ஒடுக்கத்தை யும் தர இந்நூற் கட்டுரைகள் அவ்வக்காலச் சூழலில் எழுந்தவை. அச் சூழல்களை அறிவிக்கும் நோக்கில் 'மூலப் பின்னணி என ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒவ்வொரு முன்னுரை தந்துள்ளேன். மூலப் பின்னணிகள் படிப் போர் க்கு க் கட்டுரைபற்றிய அறிமுக உரைகள், சொல்லாய்வைப் புதையல்'