பக்கம்:புதையலும் பேழையும்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 917

களும் பிற்காலப் புலவர்களும் குழுமி நிற்பதாகக் கண்டது அவர்களது இனிய பேச்சுகளை உள்ளச்செவி கேட்டுப் பூரித்தது. முல்லைப் பாட்டின் ஆசிரியர் நப்பூதனார் பேசினார் :

'எழில் தவழும் வெண்முகில் ஒலிமுழக்கந்தரும் குளிர்ந்த கடலினது நீரைக் குடித்தது. குடித்த முகில் கொம்புகொண்டது போன்று எழுந்தது -என்ற அவர் அதற்கொரு கதை உவமையையும் குறித்தார்.

'வாமனனாகத்தோற்றமெடுத்துமாவலி மன்னன்பால் மூன்றடி மண்ணைப் பெற நீரேற்றவுடன் நிமிர்ந்து வளர்ந்த நெடிய திருமால் போன்று நீருண்ட முகில் கருங்காராக எழுந்தது -என்று அகவிப் பாடினார். அவரையடுத்துப் புறநானூற்றுப் புலவர் பெருஞ்சித்திரனார்,

தொடர்ந்த ஒலியால் பேரிரைச்சலை எழுப்பும்

கடல்நீர் குறைபடுமாறு நீரை முகந்துகொண்டுவிரைந்து செல்லும் கருமுகில்' - என்றார்.

அவரைத் தொடர்ந்து பரிபாடலில் நல்லந்துவனார்,

'கடல் குறை படுத்த நீர்' -என இயற்றமிழ் தர, அவர் வழி நின்று நல்லச்சுதனார் அதனைக் காந்தார இசையில் இசைத்துக் காட்டினார்.

மற்றொரு புலவர் தனிமகனாக நின்று,

'குணகடல் முகந்து குடக்கேர்பு இருளி

தன்றொழில் வாய்த்த இன்குரல் எழிலி' -என இன்குரல் எழுப்பினார்.

1 'பாடிமிழ் பனிக்கடல் பருகி, வலனேர் பு

'கோடுகொண் டெழுந்த கொடுஞ்செல வெழிலி' முல். பா : 4, 5, 2 'நீர்செல நிமிர்ந்த மாஅல் போல’

பாடிமிழ் பனிக்கடல் பருகி' -முல் பா : 3–4. 8 "நீண் டொலி யரவங் குறைபட முகந்துகொன்

டிண்டு செலற் கொண் மு வேண்டுவய குழி இ -புறம் :161 : 1.2.

5 நற்: 158 : 1. 4