பக்கம்:புதையலும் பேழையும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 29

'கருந்தமிழ்ச் சொல்லுக் குள்ளே

கருத்துக்கள் இருத்தல் போலே' '

- என்றார்,

செஞ்சொல் ஒரு செந்நெல்.

மணிபிடித்துச் செம்மை சான்ற நெல்லைச் செஞ்சாலி - செந்நெல்’ என்பர். பொருள்முற்றிப் பயன் நல்கும் சொல்லையும் 'செஞ்சொல்' என்பர். சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கதேவர்.

‘அழகிய சிலவாகப் பகிர்ந்து பின்னிய கூந்தலை உடைய பெண்கள் புனைந்த செஞ் சொல் லாலாகிய பாடலாகிய மாலையைச் சூடிக்கொண்டான் சீவகன்” - என்பதை,

'அஞ்சில் ஒதியர் புனைந்த

- செஞ்சொல் மாலை சூடினான்’ ’

- என்று குறித்தார்

பயனில் சொல் பதர்

சொல் கருத்துடையதாக அமைவதால் மட்டும் சிறப்பில்லை, பயன் விளைப்பதாகவும் அமைய வேண்டும். அந் நிலையில்தான் சொல் தன் இயல்பில் நிறைவு பெற்றதாகும். பயன் விளைக்காத சொல்லைக் கருக்காயோடு ஒப்பிடுவர்.

பயன் விளைக்காத சொல்லை மேலும் மேலும் விரும்பிக் கூறுபவனை மாந்தர் இனத்தில் பிறந்தமகன் என்று சொல்லாதே. மக்கள் இனத் துள் தோன்றிய பதடி - பதர் - கருக்காய் என்று சொல்லுக . . . . - என்றார் திருவள்ளுவப் பெருந்தகை.

1 அழகின் சிரிப்பு : குன்றம் 8 : 2

2 சிவ சி : 691 -

3 'பயனில் சொல் பாராட்டு வானை மகனெனல்;

மக்கட் பதடி எனல்'- குறள் : 198