பக்கம்:புதையலும் பேழையும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 புதையலும்

உள்ளிடு இல்லாத நெல் பதர்; உள்ளீடு இல்லாத சொல்லும் பதர்.

காயவைத்துத் தூற்றிப் பதர் போக்கிய நெல்லைத் துாற்றிய 'நல்லநெல்’ என்பர் அதுபோன்று, பயனின்மை நீக்கியசொல்லைக் கூறவந்த சிந்தாமணி ஆசிரியர்,

'பதர் அறு திருமொழி

- என்றார்.

சொல் - சொலி.

நெற்பயிரின் தொடர்பிலும் சொல் இடம் பெறுதலைக் காணலாம். நெல்லினது தாளின் உட்புறத்திலும், மூங்கிலினது உட்புறத்திலும் மென்மையாக ஒரு வெண்மைத் தோல் உரியும். அது சொலி எனப்படும். மூங்கிலில் அஃதாவது கழையில் உள்ள அதனைப் புறநானூறு,

'கழைபடு சொலி12

-என்றும் சிறுபாணாற்றுப்படை,

'காம்பு சொலித்தன்ன'

-என்றும் குறிக்கின்றன. நெல்லையுடைய தாளைச் சொல்லை யுடைய சொலி என்னும் குறிப்பில் காண்கின்றோம்.

சொல்லும் களையும்.

பயிரின் நடுவே வளரும் புல் முதலியவற்றைக் களை என்கின் றோம். அவற்றைக் களைதலைக் களைகட்டல் என்கிறோம். இக்களைதல்-நீக்குதல் எனபதற்கு வேறு ஒரு சொல் இலக்கியங் களில் கையாளப்படுகின்றது. அச்சொல் 'சொல் என்பதன் அடியாக அமைந்த சொல்லிய என்பது. 'நண்பனுக்கு நேர்ந்த துன்பத்தைக் களையத் தொடங்கினான்’ எனக் குறிக்க வந்த திருத்தக்கதேவர்,

1 சீவ, : 2850, 2 புறம் : 888 , 10, 8 சிறுபான் : 235, 286,