பக்கம்:புதையலும் பேழையும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலப் பின்னணி

கவர்ச்சித் தலைப்பு.

நாகைத் தமிழ்ச் சங்கத்தில் ஞாயிறுதோறும் திருக்குறள் வகுப்பு நடத்தும் வாய்ப்பு நேர்ந்தது. இவ்வாய்ப்பில், திருவள்ளுவப் பெருந்தகையின் சொல்லாட்சி வியப்பை வளர்த்தது. திருக்குறள் கருத்துப் பேழையாக மட்டுமன்றிச் சொற் புதையலாகவும் விளங்குவதை உணர்ந்தேன்.

தலை, கை, கால் முதலிய உறுப்புச்சொற் களைப் பெய்துள்ள பாங்கு, தமிழின் சொல் லூற்றத்தை வெளிப்படுத்தி மொழியாக்கத்தை யும் வழங்குவதை அறிந்தேன்.

இதனை வெளிப்படுத்தும் வாய்ப்பாக அது போது நாகை வட்டத் தமிழாசிரியர் கழகத் துவக்க விழா அமைந்தது. அதிற் சொற்பொழி வாற்றப் பணித்தனர். கவர்ச்சியான தலைப்பை வேண்டினர்.

"தலையில் முளைத்த தளைகள்'

-என அறிவித்தேன்.

அச்சொற்பொழிவின் எழுத்து வடிவம் இது.

வெளியிட்ட இதழ்: மறைமலையடிகளார் நினைவுமலர்.

நாகைத் தமிழ்ச் சங்க வெளியீடு. தி. ஆ. 2000 -ஆனி-5;

- 19–6–1969.