பக்கம்:புதையலும் பேழையும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 புதையலும்

-என்னும் குறளைக் காண்கின்றோம். ஒரு தலையா' 6T65r தற்குத் திண்ணிதாக என்பது பொருள். ஒன்று என்னும் எண், எண்ணின் தோற்றம். அது பலவற்றினும் ஒன்றைச் சிறப்பித் துக் காட்ட ஒப்பற்றது என்னும் பொருளில் வரும். தலை உறுதியான உறுப்பு. இவ்வுறுதித் தலையோடு ஒப்பற்றதாம். 'ஒன்று சேர்ந்து ஒருதலை என ஒருசொல்லாய் நின்று ஒப் பற்ற உறுதியாகிய திண்ணிது’ என்னும் பொருளினைத் தருகின்றது.

இப்பொருளில் வரும் இடங்கள் : "ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு" (357) 'ஒருதலையாச் சொல்லலும்’ (634)

确 தலை அமைந்த குறட்பாக்களாக நாம் அடுத் &l.L-6\} தடுத்துக் காண்பவை, கற்றார், கல்லார் பற்றிய பெய்தல், கருத்தை அறிவிப்பவை :

செல்லல், 'உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

- அனைத்தே புலவர் தொழில்” (894) ;

'கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து

சொல்லாடச் சோர்வு படும்” (405)

இக்குறட்பாக்களில் அமைந்துள்ள "தலைக்கூடி’ தலைப் பெய்து என்னும் இரு சொற்களையும் மேலெழுந்தபடியாக நோக் கினால் சேர்ந்து அல்லது ஒன்றுகூடி' என்னும் பொருளையே தருவதாகப்படும். முன்னது, கற்றாரைப் பற்றிய கருத்துரைப்பது; பின்னதில் கல்லாரைப் பற்றிய கருத்து வந்துள்ளது. முன்னதில், ‘கூடி’ என்னும் எச்சவினைச்சொல் அமைந்துள்ளது. பின்னதில், "பெய்து என்னும் எச்சவினைச்சொல் அமைந்துள்ளது. கூடுதல்இயைபோடு கூடுதல். பெய்தல்-ஒன்றில் வேறொன்றைவைத்தல்ஊற்றல் என்னும் பொருளது. இவ்வேறுபாடுகளுடன் நோக்கினால் இரு சொற்களின் பொருள்களும் வேறுபடல் தோன்றும்.

தலைக்கூடல் :- ஐம்பொறிகளும் ஒருங்கு இயைந்து ஒன்றியது தலையாகும். அதற்கேற்பக் கற்றுவல்ல புலவர் இயைபு உடையவராய் ஒன்று சேர்வதைக் குறிக்க இச்சொல் அமைந் துள்ளது. எனவே, தலைக்கூடி’ என்பதற்கு 'இயைபோடு சேர்ந்து என்பது பொருளாகும்.