பக்கம்:புதையலும் பேழையும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் - 49

கூடி ஒரு சொல் நீர்மையாய் நின்று முற்படல்’ என்னும் பொருளைத் தோற்றுவிக்கின்றது. . (இப்பொருளோடு தலை வரும் இடங்கள் :

"தலைப்பட்டார் தீரத் துறந்தார்" (348); 'ஆற்றல் தலைப்பட் டவர்க்கு' (269); "மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்' (356); "சிலரதன் செவ்வி தலைப்படு வார்’ (1289).

அடுத்து, தலையொடு பிரி' என்னும் முதனிலை அமைந்த வினை பிரிதல் யைப் பின்னே கொண்டு அமைந்த தலைப்

பிரியா என்னுஞ் சொல் கொண்டு,

'நயனின்று நன்றி பயக்கும் பயனின்று

பண்பில் தலைப்பிரியாச் சொல்' 97 -என்னும் குறள் வருகின்றது. தலைப்பிரியா என்பதற்கு நீங்காத என்பது பொருள். பிரியா என்னுஞ் சொல்லே நீங்காத என்னும் பொருள் கொண்டது. அது வன்மையமைந்த உறுப் பாகிய தலை என்னுஞ் சொல்லோடு கூடி, ஒருசொல் நீர்மைத் தாகி நீங்காத என்னும் கருத்துக்கு வன்மை ஊட்டுகின்றது. இவ்வாறாக, இவ்விடத்துத் தலைப்பிரியா’ என்னும் சொல் 'எந் நிலையினும் நீங்காத என்னும் பொருளைத் தருகின்றது.

(இப்பொருளில், "செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார், உயிரின் தலைப்பிரிந்த ஊன் (258); "பண்பின் தலைப்பிரியா தார்” (810); "பண்பின் தலைப்பிரிதல் இன்று' (955) -என்னும் இடங் களில் தலைப்பிரிதல் அமைந்துள்ளது.) .

அடுத்து, ஒரு "ஒருதலை’ என்னும் சொல்லோடு, தலை சொற்கோட்ட மில்லது செப்பம் ஒருதலையா

உட்கோட்ட மின்மை பெரின் (119)

பே, 4 - .