பக்கம்:புதையலும் பேழையும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 புதையலும்

வாழ்நாளில் பிறந்த நாள் ஒரு பெருமைக்குரிய நாள் என்னும் கருத்தில் பெருநாள் என்றும் பெயர் பெற்றது. கல் வெட்டுகளில் ஆங்காங்கே பெருநாளைக் காண்கின்றோம்,

இவ்வழக்கையே இசுலாமிய மதத்தார் நபி பெருமானது பிறந்த நாளைக் குறிக்க ஏற்றுப் பெருநாள் கொண்டாடு கின்றனர்,

புறப்பொருள் வெண்பா மாலை,

'மணமங் கலமே பொலிமங் கலமே

நாண்மங் கலமே பரிசில் நிலையே' (9) -எனப் பிறந்த நாளை நாள் மங்கலம் என்னும் பெயரால் குறித்தது.

பிறந்த நாள் தூய்மையான நாள் என்பதன் அறிகுறியாகத் தூய்மையான வெண்ணிறப் புத்தாடை அணியப்பெற்றது. இது கொண்டு பிறந்த நாள் வெள்ளணி நாள்' எனப்பட்டது.

வடநாட்டினின்று சேரன் செங்குட்டுவன் திரும்பினான். தனது பிறந்த நாளில் தன் தலைநகரில் அமைய வேண்டுமென விரைந்து வந்தான். அதனை உழவர் வாயிலாகப் பாடும் இளங்கோவடிகளார்,

'... ... ... ... மன்னர்

அடித்தளை நீக்கும் வெள்ளணி நாள்” என்றார்.

இதுபோன்றே இலக்கியங்கள் பிறந்த நாளை வெள்ளணி நாள்' என்று குறித்தன.

தலைவியைப் பிரிந்திருக்கும் தலைவனுக்குக் குழந்தை பிறந்த செய்தியை அறிவிக்க விரும்பும் தலைவி தன்தோழியை அனுப்புவாள். அப்போது அவளைத் தூய வெண்ணிற ஆடை உடுக்கச் செய்து அனுப்புவாள். தலைவன் வெள்ளணியைக்

கண்டதும் அதனைக் குழந்தை பிறந்ததன் அறிகுறியாக உணர்ந்துகொள்வான்.

1 தஞ்சை இராசராசன் கல்வெட்டு 2 சிலம்பு : 27 228, 229