பக்கம்:புத்த ஞாயிறு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 10%:

சுகுணு: தங்கள் நம்பிக்கை பொய்க்காமல் அந்தப்.

பயணத்தில் வழிகாட்டி உடன் வர முடியும் என்கிற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது ஐயா!

காட்சி-4

[இடம்: குருகுலைப் பள்ளத்தாக்கு திராட்சை தோட்டங்களைச் சுற்றிப் பார்க்க குமார கவியும் சுகுளுவும் அங்கு வந்திருக். கிருர்கள்.)

சுகுணு நேற்றிரவு ஒரு காட்சி...

குமாரகவி என்ன, சொல்லேன் சுகுளு!

சுகுணு: வழக்கமான ஒன்றுதான்...நீங்கள் உறங்கிப் போப் விட்டீர்கள். அப்புறம் நான் பால்கனிக்குப் போய்... அது ஒரு சுகமான அனுபவம் தெய்வமே! யாரோ பெருமூச்சு விடுகின்ற மாதிரிச் சீறுகின்ற வேப்ப மரக் காற்று ஒர் புறம், தன்னியல்பாக வானத்திலிருந்து உதிர்ந்து தரையில் வீழ்கிற நட்சத்திரம்...இந்த நட்சத்திரத்தின் சாவையும், தகனத்தையும் பார்த்து இரசிப்பதுகூட மனத்துக்கு மிகவும் இதமாக இருக் கிறது. நினைத்துக் கொண்டேன். எவ்வளவோ நட்சத்திரங்கள் உதிர்ந்த பின்னரும் இழப்பேதும் இல்லாத இந்த வானம் இன்னும் அழகாய்த் தானே இருக்கிறது? இப்படி இடைவிடாமல், நாள் தவருமல் நட்சத்திரங்கள் உதிர்ந்து கொண்டேயிருந்தால் ஒரு நாள் இந்த வானம் மூளியாகி...அப்பப்பா இப்படி நினைப்பதுகூட அச்சமூட்டுவதாக இருக்கிறதே!

குமாரகவி: சுகுணு குருகுமலைப் பள்ளத்தாக்கிற்கு வந்தது

எதற்காக என்பதையே மறந்து விட்டு நீ வேறு ஏதோ சிந்தனையில் மூழ்கி விட்டாய்...இருக்கட்டும். இந்தக் காட்சியும் என்னுடைய மனத்துக்கு மகிழ்ச்சியைத். தான் தருகிறது சுகுணு...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/103&oldid=597468" இலிருந்து மீள்விக்கப்பட்டது