பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 119 வந்திருக்கிறீர்கள். இப்படி அவசரமாக வந்த காரணம் என்ன? முன்னே நடந்த கொலை சம்பந்தமாக ஏதாவது துன்பம் நேரப் போகிறதா? அப்படி இருந்தால், நாம் மறுபடியும் நம்முடைய சொந்த ஜாகையில் இருப்பது நமக்குக் கெடுதலாக அல்லவா முடியும். இங்கே என்னை அழைத்துக்கொண்டு வந்த நீங்கள் கட்டிடத்தின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போகாமல் இடதுபக்கமாகத் தோட்டத்துக்குள் எங்கே போகிறீர்கள்? நீங்கள் இப்படி மறை பொருளாகக் காரியங் களைச் செய்யச் செய்ய பயத்தினால் எனக்குக் குலைநடுக்கம் உண்டாகிறது. விஷயத்தை இரண்டொரு வார்த்தையில் சுருக்கமாகச் சொல்லுங்கள்' என்றாள். அவளது வார்த்தை களைக் கேட்ட அந்தப் புருஷர் ஆத்திரம் அடைந்து, "வாயை மூடிக்கொண்டு நடந்து வா என்று உனக்கு நான் எத்தனை தடவை சொல்லுகிறது. நான் எங்கே அழைத்துக் கொண்டு போகிறேனோ அங்கே வரவேண்டியது உன்னுடைய கடமை. அடிக்கடி தொன தொணவென்று பேச்சுக் கொடுக்காமல் வாயை மூடிக்கொண்டு வா. முடிவான இடத்துக்குப் போனால், எல்லாம் தானாகவே தெரிந்து போகிறது' என்று கண்டித்து சுருக்கமான மறுமொழி கூறிய வண்ணம் விசையாக முன்னால் நடக்க, அந்தப் பெண்பாவை முன்னிலும் பன்மடங்கு பெருகிய கவலையும் கலக்கமும் திகிலும் கலவரமும் அடைந்து நடுநடுங்கி அவரைத் தொடர்ந்து ஒட்டமாக நடந்து சென்றாள். அவர்கள் இருவரும் தோட்டத்தின் வழியாக நடந்து கட்டிடங்களின் பின்புறத்தை அடைந்து அதற்கு அப்பாலிருந்த மாந்தோப்பிற்குள் நுழைந்து சிறிது தூரம் சென்றனர். ஆகாயத்தில் சந்திரன் நன்றாகப் பிரகாசித்து நிலவைப் பரப்பிக் கொண்டிருந்ததனாலும், அவ்விடத்தில் மாமரங்களின் கிளைகள் அடர்ந்து பரவிப் பந்தல் போடப்பட்டது போல ஆகாயத்தைப் போர்த்துக்கொண்டிருந்தன. ஆகையால், தோப்பு முழுவதும் இருள் நிறைந்திருந்தது. அவர்கள் இருவரும் இருளடர்ந்த