பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 209 என்னுடைய சம்சாரத்துக்கு நிரம்பவும் அன்னியோன்னியமான சிநேகிதை. ஆனால், அவள் புருஷனுக்குள் இருப்பவள்; அது நினைவிருக்கட்டும். அந்தப் புருஷன் இப்போது இந்த ஊரில் இல்லை. வெளியூருக்கு ஏதோ காரியார்த்தமாகப் போயிருக்கி றான். அவள் கொஞ்சம் தமாஷாக இருக்கக் கூடியவள்தான். ஆனால், காதும் காதும் வைத்தது போல காரியத்தை மிகவும் ரகசியமாகவே நடத்திக்கொள்வாள். ஹேமாபாயி:- (இனிமையாக நகைத்து) அவள் எப்படிப் பட்டவளாகவாவது இருக்கட்டும். அந்த விவரத்தை எல்லாம் நான்யார் பொருட்டு இந்த முயற்சி செய்கிறேனோஅந்த மனிதர் அந்தப் பெண்ணின் பெயர்முதலிய எந்த விவரத்தையும் கேட்கப் போகிறதில்லை. ஆனால் அந்தப் பெண்அவருடைய மனசுக்குப் பிடித்தவளாக இருந்து அவர் அவளை மறுபடியும் பார்க்க ஆசைப்பட்டால், அவர்தம்முடைய பெயரைவேண்டுமானால் அவளிடம் வெளியிடலாம். இது அவருடைய இஷ்டத்தைப் பொருத்தது. திங்கட்கிழமை ராத்திரி நான் வருவதைப் பற்றித் தடையில்லை. நான் எவ்விடத்துக்கு வருகிறது என்பதைச் சொல்லுங்கள். மாசிலாமணிப்பிள்ளை:- நீ என்னவிதமான வண்டி கொண்டுவரப் போகிறாய்? ஹேமாபாயி:- நன்றாக மூடியிருக்கும் பெட்டிவண்டி ஒன்று கொண்டு வருகிறேன். மாசிலாமணிப்பிள்ளை:- சரி; திங்கள்கிழமை சரியாக எட்டு மணிக்கு நீ பெட்டிவண்டியோடு வந்து சேர். ஆனால், இந்த ஊருக்குள்ளேயே நீ வரவேண்டாம். வீடுகள் ஆரம்பமாகும் இடத்துக்குக் கொஞ்ச தூரத்தில் சமுத்திரம் என்று பெயர்கொண்ட ஏரி இருக்கிறதல்லவா? அதன் கரையண்டை வண்டியை நிறுத்திக் கொண்டிரு. நான் அந்தப் பெண்ணை சித்தமாக அதே காலத்தில் கொண்டுவந்து வண்டியில் ஏற்றிவிட்டு அனுப்புகிறேன்- என்றார்.