பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 பூர்ணசந்திரோதயம்-2 வெளியிலிருந்து வந்த மனிதன் யாராக இருப்பான் என்றும், அந்த அகால வேளையில் அவன் வந்து அவ்வளவு அவசரமாகக் கதவை இடிக்கவேண்டிய காரணம் என்ன என்றும் அவள் பலவாறு எண்ணமிட்டவளாய், முன்னிலும் அதிகரித்த திகிலும் நடுக்கமும் அடைந்தவளாய்ச் சிறிது நேரம் திகைத்து சிந்தனையே வடிவமாக நின்று, பிறகு தனது சயனத்தை அடைந்து அதன்மேல் ஏறி உட்கார்ந்து கொண்டாள். அரை நாழிகை நேரம் சென்றது. அவளது புருஷர் படுக்கையறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்து சேர்ந்தார். அவரது முகம் விகாரமடைந்து மனதிலுள்ள சங்கடத்தை வெளிப்படுத்தியது. அவரைக் கண்டவுடனே அந்தப் பெண், “என்ன விசேஷம்? யாரது?" என்று மிகுந்த ஆவலோடு வினவினாள். அதைக்கேட்ட அவளது புருஷர், 'விசேஷம் ஒன்றுமில்லை. வெண்ணாற் றங்கரையில் நாம் இருந்த வீட்டுக்கு அண்ணாசாமி நாயக்கன் என்று ஒருவன் அடிக்கடி வருவான் அல்லவா? இங்கே பக்கத்திலுள்ள பூண்டி என்ற ஊரில் இன்றையதினம் ஐந்தாம் திருவிழாவாம். ரிஷப வாகன வேடிக்கை பார்த்துவிட்டு ஊருக்குப் போவதற்காகத் திரும்பி வந்தானாம். இந்த ஊரில் நாம் இருப்பது இவனுக்குத் தெரியும். ஆகையால், நம்மைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று அவன் இங்கே வந்தான். ராத்திரி இங்கேயே படுத்திருந்து நாளைக்குக் காலையில் போகும்படி நான் சொல்லிப் படுக்க வைத்து விட்டு வந்தேன். வேறே ஒன்றும் விசேஷமில்லை' என்றான். - அந்த வரலாறு அவளுக்கு உண்மையாகத் தோன்றவில்லை. புதிதாக வந்த மனிதன் கதவை இடித்த மாதிரியும் அவனது குரலின் மாதிரியும் தனது புருஷரது முகம் மாறுபட்டிருந்ததும், தான் கேட்ட உடனே தனது புருஷர் சிறிது யோசித்து மறுமொழி கூறியவிதமும் ஒன்றுகூடி அவளது மனதில்