பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 281 அழைத்துவந்த மனிதன், தான் உள்ளேபோய், முதலில் தண்ணீர் அனுப்புவதாகவும் கொஞ்ச நேரத்தில் சாப்பாடு தயாரிக்கச் செய்து உண்பிப்பதாகவும், சொல்லிவிட்டு இரண்டாங் கட்டுக்குப் போனான். நான் படுத்து அரைத் துக்கத்தில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு பெண்பிள்ளை சந்தடி செய்யாமல் மெதுவாக நடந்து வந்து என்னைத் தட்டி எழுப்ப, நான் உடனே திடுக்கிட்டு எழுந்தேன். அந்தப் பெண் பிள்ளை மிகவும் தணிவான குரலில் பேசத்தொடங்கி, அந்த இடம் திருடர்களும் கொலைகாரர்களும் இருக்குமிடம்; ஆகையால் உடனே புறப்பட்டு சந்தடி செய்யாமல் வெளியில் போய் எங்கேயாவது ஒடிப்போகும்படி எச்சரித்துவிட்டு விசையாக நடந்து வெளியில் போய்விட்டாள். அந்தச் சங்கதியைக் கேட்டவுடனே என் அங்கம் பதறிப் பறந்தது. மனம் பரமவேதனை அடைந்தது. நான் உடனே சடேரென்று எழுந்து ஒசை செய்யாமல் நடந்து வெளியில் போய் ஒட்டமாக ஒடினேன். என்னுடைய உடம்பில் கொஞ்சமும் சீவனில்லாது இருந்தாலும், அந்த வீட்டிலுள்ள திருடர்கள் எனக்கு எவ்விதமான துன்பம் செய்வார்களோ என்ற திகிலே அந்தச் சமயத்தில் எனக்கு அபாரமான வலுவைக் கெர்டுத்து என்னைத் தள்ளிக்கொண்டு போனது; நான்தலைகால் தெரியாமல் அங்கும் இங்கும் ஒடி அலைந்து கடைசியாக ஒரு பெரிய ரஸ்தாவுக்கு வந்து சேர்ந்தேன். அவ்விடத்தில் மனிதர்களுடைய நடப்பே காணப்படவில்லை. மணியும் ஒன்பது ஆகியிருக்கலாம். வழியில் கொஞ்சதுரத்துக்கு ஒரிடத்தில் லாந்தர்க் கம்பங்கள் இருந்தன. அந்த வழியாக நான் வரும் போது ஒரு லாந்தர் கம்பத்தடியில் ஒரு கல்லில் கால் தடுக்க நான் கீழே விழுந்து மயங்கிப் போய்விட்டேன். அப்போது தான் தாங்கள் வந்து என்னைக்கண்டு தூக்கி எடுத்துத் தங்களுடைய ஜாகைக்குக் கொண்டு வந்து எனக்கு உயிர் கொடுத்து என்னைக் காப்பாற்றியது. இவ்வளவுதான் என்னுடைய வரலாறு. தாங்கள் என்னைக் காப்பாற்றிச் சம்பாதித்துக் கொண்ட புண்ணியத்தை