பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 79 அதைக் கேட்ட பெண்மணி, 'அது எப்படி அபகாரமாகும்? கபட சன்னியாசியின் ஆள்கள் வராமல் தங்களுடைய ஆள்கள் காவல் காத்திருந்தது உண்மையான விஷயம். அது உபகாரமே அன்றி அபகாரமல்ல. எங்களுடைய மனசில் நாங்கள் தவறாக நினைத்திருந்தது எங்களுடைய குற்றமேயன்றி, அவர்களுடைய குற்றம் அல்ல. எங்களுடைய மனம் கொஞ்ச நேரம் துன்பம டைந்தது என்ற விஷயம் உண்மையானாலும், அதனால் எங்களுக்கு உண்மையில் ஒருவிதப் பொல்லாங்கும் நேரப் போவதில்லை அல்லவா! அது போகட்டும். தாங்கள் அதன் பிறகு பொன்னிரைக்குப் போயிருந்தீர்களா? தங்களுடைய சிநேகிதருடைய தேக ஸ்திதி எப்படி இருக்கிறது?’ என்று கவலையோடு வினவ, அதைக் கேட்ட அந்த யெளவனப் புருஷரது முகம் முற்றிலும் வாட்டமடைந்து, மிகுந்த விசனங் கொண்டதாகக் காணப்பட்டது. அவர் கனைத்துக்கொண்டு பேசத் தொடங்கி, தயங்கித் தயங்கி நிறுத்தி மறுபடியும் பேச ஆரம்பித்து, 'என்னுடைய சிநேகிதன் எங்கே இருக்கிறான்! அவனுடைய உடம்பு இந்நேரம் நெருப்புக்கு இரையாகி இருக்கும். நான் உன்னை இங்கே கொண்டுவந்து விட்டுப்போக இரவு சரியாகப் பன்னிரண்டு மணி ஆயிற்று. அவன் பத்து மணிக்கே இறந்துபோய் விட்டான், 'கலியான சுந்தரம் வந்தானா கலியாணசுந்தரம் வந்தானா என்று கேட்டுக் கொண்டே இருந்து, நான் வருவேன் வருவேன் என்று கடைசி வரையில் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த படியே அவன் இறந்துபோய் விட்டானாம். நான் உன் விஷயத்தில் செய்த புண்ணியச் செய்கையின் பலனாக, அவன் இன்னமும் கொஞ்சநேரம் பிழைத்திருக்கமாட்டானா என்றும், நான் எப்படியும் அவனோடு பேசலாம் என்றும் நினைத்துக் கொண்டு போனேன். ஆனால் என்னுடைய எண்ணம் பலிக்காமல் போய்விட்டது. இன்று காலை பத்து மணிக்கெல்லாம் அவனை வாரிக்கொண்டு போய்க் கொளுத்தி விட்டார்கள். அந்த ஊரில் இருக்க எனக்குச் சகிக்கவில்லை. 基·夺。疆一6