பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 97 கலியாண:- (நிரம்பவும் கிலேசமடைந்து) நீர் சொல்லுவது நியாயமானசங்கதிதான். நான் அந்தக் கடிதத்தைப் படித்து அதன் சங்கதி இன்னதென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமான காரியந்தான். ஆனால், அதற்காக வெகு தூரத்திலுள்ளதஞ்சாவூருக்கு வரவேண்டுமென்பதுதான் எனக்கு சங்கடமாக இருக்கிறது. நீர் எனக்கு ஒர் உதவி செய்யக்கூடாதா? நீர் என்னை இங்கேயே இறக்கி விட்டுவிடும். நான் பூனாதேசத்துக்குப் போகிறேன். அவ்விடத்திற்கு நீங்கள் தபால் மூலமாக அந்தக் கடிதத்தை அனுப்பிவையுங்கள். தபால் கச்சேரித் தலைவர் மேல் விலாசம் பார்த்து கலியாண சுந்தரத்துக்குக் கொடுப்பது என்று எழுதி அதை அனுப்பி விடுங்கள். நான் அங்கே போய் வாங்கிப் பார்த்துக் கொள்ளுகிறேன்.

பஞ்சண்ணா:- அப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லை. அவர் சொன்னபடி நான் செய்ய வேண்டுமேயன்றி, சுதாவாக நானே எதையும் செய்ய எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. ஆகையால், நீர் தஞ்சாவூருக்கு வந்தே கடிதத்தை வாங்கிக்கொள்ளும்; உம்மை நான் இவ்விடத்தில் இறக்கி விடவும் எனக்கு அதிகாரமில்லை.

கலியாண:- அப்படியானால், நான் உங்களோடு வர மாட்டேன் என்றால்கூட நீங்கள் என்னை விடாமல் பலாத்காரமாகக் கொண்டு போவீர்கள் போலிருக்கிறது. இப்போதும் என்னுடைய சிறை நீங்கவில்லை போலிருக்கிறது. ஒரே இடத்தில் இருக்கும்படியான சிறையானது பிரயாணம் போகும் படியான சிறையாய் மாறியிருக்கிறது போலும்; அவ்வளவுதான் வித்தியாசம் போலிருக்கிறது. *

பஞ்சண்ணா:- நீர் அப்படி நினைக்கக்கூடாது. உம்மை நாங்கள் இந்தச் சிறைச்சாலையிலிருந்து விடுவித்து தஞ்சாவூ ருக்கு அழைத்து வரவேண்டியது. அவ்விடத்தில் கடிதத்தைக்

கொடுக்க வேண்டியது. அதுதான் நாங்கள் செய்ய வேண்டியது.

பூ.ச.V-7 -