பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 99 - இருக்கிறாளோ வென்றும், அவள் தன்னைப்பற்றி அப்போது எவ்விதமான அபிப் பிராயம் வைத்திருக்கிறாளோ என்றும் அவன் நினைந்து நினைந்து உருகினான். தன்னைவிடுவிக்கும் மனிதர் எழுதிக்கொடுத்துள்ள கடிதத்தில் என்ன விஷயம் எழுதப்பட்டிருக்குமோ என்றும், அவர் அதைத் தஞ்சையில்தான் கொடுக்கவேண்டுமென்று ஏன் தன்னைக் கட்டாயப்படுத்த வேண்டுமென்றும் அவன் வெகுநேரம் வரையில் எண்ணி எண்ணிப் பார்த்தும், மர்மம் இன்னதென விளங்காமலேயே இருந்தது. அந்த மனிதன் தஞ்சாவூருக்குப் போனவுடன் கடிதத்தைக் கொடுத்துத் தன்னைச் சுயேச்சையாக அனுப்பு வானோ, அல்லது அப்படிச் செய்யாமல் தன்னை அந்த மனிதரி டமோ வேறு எவ்விடத்திலோ கொண்டு போய்விடுவானோ என்ற சந்தேகமும் உண்டாயிற்று. பழைய சிறைச்சாலையைக் காட்டிலும், அதிக கொடுமையும் பந்தோ பஸ்துமான வேறு புதிய சிறைச்சாலையில் தான் வாசம் செய்ய நேருமோ என்றும் ஐயமுற்றவனாய், முடிவில்தான் அவர்களிடம் எவ்வித சச்சரவும் செய்யாமல் தஞ்சை வரையில் போய் அவர்கள் கொடுப்பதாகச் சொன்ன கடிதத்தை வாங்கிப் பார்த்து அதன் பிறகு சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி நடந்துகொள்ள வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு சாந்தமாகவே உட்கார்ந்திருந்தான்.

அதன்பிறகு அந்தப் பிரயாணத்தில் நடந்த வரலாறு களெல்லாம் அவ்வளவு விசேஷமானசங்கதிகளல்ல. ஆதலால், அவற்றை விவரிக்காமல் விடுத்து முடிவான செய்தியை நாம் வெளியிடுவோம். பஞ்சண்ணா ராவ் நடுவழியில் போகும் போது இரண்டிடங்களில் குதிரைகளை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்து வைத்திருந்தான். ஆதலால், அவ்விடங்களில் பழைய குதிரைகள் விலக்கப்பட்டுப் புதியவை பூட்டப்பட்டன. ஆனால், பஞ்சண்ணா ராவ் தன்னுடன் கூடவே சாப்பாட்டு சாமான்களும் கொண்டு வந்திருந்தான். ஆகையால், ஊர்கள் இல்லாத காட்டு இடங்களில் வண்டியை அவிழ்த்துப் போட்டுக்