பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 101 சந்தில் நுழைந்து மறைந்துபோய்விட்டது. கலியாணசுந்தரம் தனது கையிலிருந்த கடிதத்தை அளவற்ற ஆவலோடும் பதைப்போடும் பிரித்துப் படிக்கலானான்.

43 -வது அதிகாரம்

சூழ்வினை நிகழுமோ ஊழ்வினை நிகழுமோ

தஞ்சையில் ஷண்முகவடிவு மருங்காபுரி ஜெமீந்தாரினது மாளிகையிலிருந்து தப்பித்து வெளிப்பட்ட இரவில் அந்த அருங்குணமடந்தைக்கு நேரிட்ட இடுக்கண்களெல்லாம் முன் ஒர் அதிகாரத்தில் விரித்துக் கூறப்பட்டனவல்லவா? முடிவில் அவள் ஒரு மடத்தில் ஒர் அறைக்குள் சயனித்திருந்த காலத்தில், அவளுக்கருகில் படுத்திருந்த பாட்டி பழைய பண்டாரமாக மாறிப் போனாள் அல்லவா? அந்த எதிர்பாராத விபரீத மாறு பாட்டைக் கண்ட இளந்தோகையான ஷண்முகவடிவினது தேகம் கிடுகிடென்று நடுங்கியது. தன்மீதுதுர்மோகம் கொண்டி ருந்த வஞ்சக மனிதனான அந்தப் பண்டாரத்தினிடம் தான் மறுபடியும் தனிமையில் அகப்பட்டுக்கொண்டதையும், தாம் இருந்த அறையின் கதவு வெளிப்புறத்தில் தாளிடப்பட்டுப் போனதையும் காண, அந்த மெல்லிய நங்கையின் மனம் பெருத்த திகில்கொண்டு தத்தளித்தது. அது அதிக விஸ்தாரமான மடமாதலாலும், அந்த அறை அதன் மத்தியில் இருந்தமை யாலும், அவ்விடத்திலிருந்து தான் கூச்சலிடுவதில் தனக்கு யாதொரு பலனும் ஏற்படாது என்பது அவளுக்கு நன்றாகத் தெரிந்தது. ஆகையால், அந்த நினைவு திகிலைப் பன்மடங்கு பெருக்கியதன்றி, தான் அன்றையதினம் தப்ப முடியாதென்ற ஒருவித அவ நம்பிக்கையும் உண்டாக்கியது. அதற்குமுன் பல தடவைகளில், தான்.அதைவிடப்பெரிய இடர்களில் அகப்பட்டு அநாதரவாக இருந்த தருணங்களில் கடவுள் தோன்றாத் துணைவராக இருந்து தனது மானத்தையும் உயிரையும்