பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 பூர்ணசந்திரோதயம் - 5

கொண்டிருந்த துர் நினைவின் உறுதியையும் கண்ட நமது பெண்மணி தான் அதற்குமேல் என்ன செய்வதென்பதை அறியாமல் சிறிதுநேரம் தயங்கியபின், ‘சுவாமிகளே தாங்கள் சொல்லுவதுதாங்கள் சம்பந்தப்படுகிற வரையில், ஒருவிதத்தில் நியாயமான விஷயமாக இருக்கலாம். உலகைத்துறந்து காஷாய மணிந்து மடத்தில் சுவாமி பூஜை செய்துகொண்டிருக்கும் தங்களைப்போன்ற மகான்கள் அற்பமாவது தவறு செய்யாமல் கடைசிவரையில் ஒழுங்கான வழியில் நடந்துகொள்வதே உத்தமமானது. அப்படிச் செய்ய இயலாமல் இடை நடுவில், தாங்கள் மனம் சலிக்குமானால், தாங்கள் துறுவறத்துக்கு இன்னும் பக்குவ நிலைமை அடையவில்லையென்று நினைத்து, இந்த நிலைமையை விடுத்து, இல்லறத்தை ஏற்று யாரையேனும் ஒரு ஸ்திரீயைக் கிரமப்படி கலியாணம் செய்து கொண்டு வாழ்வது ஒழுங்கான காரியமன்றி, அதைவிட்டு தங்களுடைய கண்ணில் படுகிறவள் எவளாக இருந்தாலும் அவள் மேல் துர்மோகம் கொள்வது நியாயமாகுமா? அப்படி தங்கள் கண்களில் படும் ஸ்திரீகளெல்லாம் தாசிகளென்று தாங்கள் கருதலாமா? அவர்களுக்குக் கற்பென்பது இல்லையா? தாங்கள் பேரின்ப வீட்டை அடையவேண்டுமென்று மான முள்ள குடும்ப ஸ்திரீகள் அவர்களுடைய கற்பை இழக்கச் சம்மதிப்பார்களா? தாங்கள் துறவற தருமத்தைக் காப்பது தங்களுக்கு எவ்வளவு முக்கியமானதோ, அதுபோல அவர்களுக்கு இல்லற தருமத்தைக் காப்பது அத்யாவசிய மல்லவா? அவர்கள் தங்கள் தேக பரிசுத்தத்தைக் காப்பாற்றிக் கொள்ளத் தங்கள் புருஷர்களுக்கு உத்தரவாதம் உடையவர் களல்லவா? அப்படியிருக்க, தாங்கள் இடமறிந் தல்லவா இப்படிப்பட்ட பிரஸ்தாபத்தைச் செய்ய வேண்டும். தங்களுடைய விருப்பத்துக்கு இணங்கி நடக்கிறவளைத் தேடிப் பிடித்து தாங்கள் தங்களுடைய பிரியப்படி செய்யலாமே அன்றி, மனிதருடைய யோக்கியதையை அறிந்துகொள்ளாமல் எல்லோரிடத்திலும் தாங்கள் தாறுமாறாக நடந்துகொள்வது