பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பூர்ணசந்திரோதயம்-5 என்னை அழைத்துக் கொண்டுபோய், நான் அவர்களோடு பேசப் பிரியப்படுவதாகச் சொன்னாள். அங்கே இருந்த உன்அக்காளை நான் பார்த்தேன். அவள் உன்னைப் போலவே இருக்கிறாள். அவளைப் பார்த்தவுடனே என் சந்தேகமெல்லாம் நீங்கிவிட்டது. அவள் உன்னுடைய அக்காள்தான் என்ற நிச்சயம் ஏற்பட்டுவிட்டது. நான் உடனே அவர்களோடு பேசி உன் விஷயத்தையும் நீ என் வீட்டிலிருப்பதையும் தெரிவித்தேன். விஷயத்தைக் கேட்டவுடனே அவர்கள் பதறிப் போய் உன்னை உடனே அழைத்துக்கொண்டு வரும் படி என்னை அனுப்பியதோடு ஒரு பெட்டி வண்டியில் உன்னை வைத்து அழைத்து வரும்படி ஒரு வண்டியும் அனுப்பியிருக்கிறார்கள். வண்டி வாசலில் நிற்கிறது” என்றாள்.

அந்த வரலாற்றைக் கேட்ட ஷண்முகவடிவு அதை உண்மை என்றே நம்பி, “நாம் உடனே புறப்பட்டுப் போகலாம்” என்று உடனே மறுமொழி கூறினாள். ஹேமாபாயி அதற்கு யாதொரு ஆrே:பனையும் சொல்லாமல் அவளை அழைத்துக்கொண்டு மேன்மாடத்தை விட்டுக் கீழே இறங்கி வந்தாள். வந்தவள் தனது வேலைக்காரியை அழைத்து, “ஷண்முகவடிவின் அக்காள் அகப்பட்டுவிட்டாள். அவள் இந்த ஊர் அரண்மனையில் இருக்கிறாள். நான் உடனே இவளை அங்கே அழைத்துக் கொண்டு போக வேண்டும். நீ வீட்டை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொண்டிரு’ என்று கூறினாள். வேலைக்காரி ஒன்றையும் அறியாதவள்போல நடித்து, “சமையல் ஆய்விட்டது. ஷண்முகவடிவுக்கு சாப்பாடு போட்டு அழைத்துக் கொண்டு போகிறதுதானே’ என்றாள்.

உடனே ஹேமாபாயி, “அவள் இப்போது எங்கே சாப்பிடப் போகிறாள். தன்னுடைய அக்காளைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலில் அவளுக்குச் சாப்பாடு பிடிக்காது; அங்கே போனால் இவளுக்குச் சாப்பாடு இல்லாமலா போகிறது’ என்றாள். ஷண்முகவடிவும் அதை ஆமோதித்தவளாய், ‘ஆம் எனக்கு