பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 155 மனிதர் அந்தத் தெருவில் இருக்கிறாரா என்று நான் அவளிடம் கேட்டேன். அவள், ‘ஆஹா இருக்கிறார். அவர் இந்த ஊர் இளவரசருக்கு நிரம்பவும் அந்தரங்கமான சிநேகிதர். இந்த அரண்மனையில் தார்வார் தேசத்திலிருந்து பூர்ணசந்திரோதயம் என்று பெயர்கொண்ட ஒரு பெண் வந்திருக்கிறாள். இளவரசருடைய பட்டமகிஷி விபசார தோஷம் செய்து விட்டாள். ஆகையால், இளவரசர் நேரிலேயே பூனாதேசம் போய், அந்தச் சங்கதியை நேரிலே பார்த்துவிட்டு வந்திருக் கிறார். அவர் அந்தப் பட்டமகிஷியைத் தள்ளிவிட்டு மேற்படி பூர்ணசந்திரோதயத் தைக் கலியாணம் செய்து கொண்டு அவளையே பட்டமகிஷியாக்கப் போகிறார். அதற்காக முகூர்த்த நாள் குறிப்பிட்டாய் விட்டது. இன்னும் 3 தினங்களில் கலியாணம் நடக்கப் போகிறது. அதற்காக சகலமான ஏற்பாடு களும் நடந்து வருகின்றன. அரண்மனை முழுதும் அற்புதமாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இளவரசருடைய ஆப்த சிநேகிதர்கள் எல்லோரும் குடும்ப சகிதமாக உடனே வரும்படி அவர் முகூர்த்தப் பத்திரிகை அனுப்பிவிட்டார். அநேக ஜெமீன்தார்களும் பெரிய மனிதர்களும் வந்து அரண்மனையில் அவரவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட விடுதிகளில் இறங்கி இருக்கிறார்கள். அதுபோல, அந்த சோமசுந்தரம் பிள்ளையும் குடும்ப சமேதராய் வந்திருக்கிறார் என்றாள். நான் அதைக்கேட்ட உடனே மிகுந்த சந்தோஷமடைந்து, ‘அவரோடு இன்னும் யார்யார் வந்திருக்கிறார்கள்?’ என்று நான் கேட்டேன். அவள் அவரோடு அவருடைய சம்சாரமும் ஒரு பெண்ணும் வந்திருக்கிறார்கள் என்றாள். அந்தப் பெண் உன்னுடைய அக்காளான கமலமாகத்தான் இருக்க வேண்டுமென்று நான் உடனே நிச்சயித்துக் கொண்டு அவர்கள் இறங்கியிருக்கும் விடுதிக்கு என்னை உடனே அழைத்துக்கொண்டு போகும்படி நான் என் சிநேகிதையிடம் கேட்டுக்கொள்ள, அவள் அப்படியே என்னை அழைத்துக் கொண்டு போனதன்றி, சோமசுந்தரம் பிள்ளையின் சம்சாரமும் உன் அக்காளும் இருந்த விடுதிக்குள்