பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பூர்ணசந்திரோதயம் - 5 அகப்பட்டு விட்டாளா அவள் எங்கே இருக்கிறாள்? இப்போது உங்களோடு வந்திருக்கிறாளா? நீங்கள் அவளைப் பார்த்தீர்களா? நான் இங்கே வந்திருப்பது அவளுக்குத் தெரியுமா?” என்று பல கேள்விகளைக் கேட்கத் தொடங்கினாள்.

அதைக்கேட்ட ஹேமாபாயி அவளைக் காட்டிலும் அதிக ஆவேசம் கொண்டவளாய், “அவள் இதோ இந்த ஊர் அரண்மனையில் இருக்கிறாள். நான் போய் நேரில் அவளைக் கண்டு உன்னுடைய சங்கதிகளையும் நீ இங்கே வந்திருப்ப தையும் தெரிவித்தேன். உனக்கு நேர்ந்த அபாயங்களைக் கேட்டு அவள் அடைந்த விசனம் சொல்ல முடியாது. அவள் உன்னைப் பார்க்க வேண்டுமென்று நிரம்பவும் ஆவல் கொண்டு துடி துடித்துக்கொண்டிருக்கிறாள்; உன்னை உடனே அழைத்துக் கொண்டு வரும்படி என்னை அனுப்பினாள் என்றாள். அதைக் கேட்ட ஷண்முகவடிவு கட்டிலடங்கா மனவெழுச்சியும் ஆவலும் அடைந்தவளாய், “அவள் சக்கா நாயக்கர் தெருவிலி ருப்பதாக அல்லவா எனக்கு எழுதி இருந்தாள்; அவள் இந்த ஊர் அரண்மனையில் இருக்க வேண்டிய காரணமென்ன?’ என்றாள்.

ஹேமாபாயி, “நான் அவளைக் கண்டவுடனே, அந்த சந்தோஷத்தில் அவள் எனக்கு எழுதிய விலாசத்தைப் பற்றிய தகவலைக் கேட்க மறந்துவிட்டேன். நான் இந்த ஊர் அரண்மனையிலுள்ள என்னுடைய சிநேகிதை ஒருத்தியைப் பார்த்துவிட்டு வரவேண்டுமென்று அங்கே போய் அவளோடு பேசிக்கொண்டிருந்தேன். அவள் சக்கா நாயக்கர் தெருவில் குடியிருப்பவள். பகல்ெலாம் அவள் அரண்மனையில் வேலை செய்துவிட்டு இரவில் அவள் தன்னுடைய வீட்டுக்குப் போய்விடுவாள். அவளோடு நான் என்னுடைய சொந்த விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது அவள் இருந்த தெருவின் நினைவு வந்தது. அவளிடம் கேட்டுப் பார்த்தால் ஏதாவது தகவல் தெரியுமென்ற எண்ணம் உண்டானது. சோமசுந்தரம்பிள்ளை என்று யாராவது பெரிய