பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 157 வயிற்றில் பசியே இல்லை. எப்படியாவது நான் என் அக்காளைப் பார்த்தால், அதுவே போதும். நான் சாப்பிட்டதை விட அதிக திருப்தி ஏற்படும்” என்றாள்.

உடனே ஹேமாபாயி இரண்டு போர்வைகள் வருவித்துத் தான் ஒன்றைப் போர்த்திக் கொண்டாள்; ஷண்முகவடிவினிடம் மற்றொன்றைக் கொடுத்து அவளும் அதனால் தனது தலைமுதல் கால் வரையில் போர்த்துக்கொள்ளச் செய்தாள். அப்போது ஷண்முகவடிவு நிரம்பவும் விலையுயர்ந்த பட்டாடைகளையும் வைர ஆபரணங்களையும் ஏராளமாக அணிந்து ஜெகஜ்ஜோதி யாக இருந்தாள். ஆனாலும், தனது அக்காளைக் காண வேண்டு மென்ற ஆவலில் அவள் தனது அலங்காரத்தின் மேல் தனது கவனத்தைச் செலுத்தவேயில்லை. தன்மீது தகத் தகாயமான ஆபரணங்கள் இருக்கின்றனவே என்ற நினைவே அவள் கொள்ளவேயில்லை. அடுத்த நிமிஷம் அவர்கள் இருவரும் வெளியில் போய் அவ்விடத்தில் ஆயத்தமாக நின்ற பெட்டி வண்டியில் ஏறிக்கொண்டனர். அதன் கதவுகள் நன்றாக மறைக்கப்பட்டன. உடனே வண்டி புறப்பட்டு அரண்மனை யிருந்த திக்கில் செல்ல ஆரம்பித்தது.

வண்டிக்குள் இருந்த இருவரும் சிறிது நேரம் வரையில் மெளனமாக இருந்தனர். ஆனாலும், இருவரது மனமும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வெவ்வேறுவிதமான எண்ணங் களையும் ஆசைகளையும் கொண்டு கொந்தளித்து, சகிக்க இயலாதபடிதுடிதுடித்துக்கொண்டிருந்தது. ஹேமாபாயி தனது சதியாலோசனையைக் கடைசிவரையில் யாதொரு இடையூறு மின்றி நிர்விக்னமாய் முடிவுறவேண்டுமே என்றும், ஷண்முக வடிவு இன்னும் அரைநாழிகை நேரம் தனது சொற் படி நடப்பாளாளால், தான் பெரிய பணக்காரி ஆகிவிடலாம் என்றும் எண்ணி மனக்கோட்டை கட்டி ஆவலே வடிவாக உட்கார்ந்திருந்தாள். ஆனால் இருபது நாட்களாக ஷண்முக வடிவு தன்னைப்பற்றி சிறிதும் சந்தேகிக்காதபடி நிரம்பவும்