பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 185 வைத்துக்கொண்டிரு; நான் போய்விட்டு வந்து விடுகிறேன்’ என்று கூறிவிட்டுக் கதவை மூடி வெளியில் தாளிட்டுக்

கொண்டாள்.

உடனே ஷண்முகவடிவு எழுந்து கடிதம் விழுந்து கிடந்த இடத்தை அடைந்து கீழே குனிந்து அதை எடுத்துக் கொண்டு நிமிர்ந்தாள். அதுவரையில் அவள் எவ்விதச் சந்தேகமும் கொள்ளாதிருந்தாள். ஆனாலும், வெளியில் சென்ற ஸ் தி ரீ கதவை மூடி வெளியில் சாத்திக்கொண்டது அவளது மனதில் ஒருவித வியப்பை உண்டாக்கியது. மற்ற வாசற் படிகள் திறந்திருக்கின்றனவா என்ற சந்தேகம் அவளது மனதில் தோன்றியது. ஆகையால், அவள் உடனே நாற்புறங்களிலும் திரும்பிப் பார்த்தாள். தான் வந்தபோது திறக்கப்பட்டிருந்த நாலைந்து கதவுகளும் நன்றாக மூடப்பட்டுப் போயிருந்ததைக் கண்டாள். அவளது மனம் இன்னதென்று விவரிக்க இயலாத ஒரு வித சஞ்சலத்தை அடையத் தொடங்கியது. தனது கையிலிருந்த கடிதம் யாருக்கு எழுதப்பட்டது என்பதை அறிய வேண்டு மென்ற நினைவு அவளது மனத்தில் தோன்றியது ஆகையால், அவள் தனது கையிலிருந்த கடிதத்தை விளக்கு வெளிச்சத்தில் பிடித்து அதன் மேல் விலாசத்தைப் பார்த்தாள். பார்க்கவே அவளது மனம் திடுக் கிட்டு பெருத்த திகிலும் கலவரமும் கொண்டது. அந்தக் கடிதத்தின்மேல், செளபாக்கியவதி ஷண்முகவடிவிற்கு என்ற எழுத்துக்கள் காணப்பட்டன. தான் வருமுன்பே தனக்கு ஒரு கடிதம் எழுதி வைக்கப்பட்டிருப்பதின் காரணம் என்னவாக இருக்கலாமென்று அவள் யோசித்தாள். அவளது மனதில் நூற்றுக் கணக்கான சந்தேகங்களும் எண்ணங்களும் உதித்தன. அவள் உடனே அதைத் பிரித்துப் படிக்கலானாள். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது:

பெண்ணே! ஷண்முகவடிவூ! நீ உன் அக்காளை இனி

காணமுடியாது. அவளைச் சந்திப்பதற்காக நீ இங்கே வரவழைக்கப்படவில்லை. வேறே யாருக்கும் கிடைக்காத