பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 பூர்ணசந்திரோதயம் - 5 பெருத்த பாக்கியத்தை அடைவதற்கே நீ இங்கே வந்திருக்கிறாய். இந்தத் தேசத்தின் அதிபதியான இளவரசருடைய ஆசை நாயகி யாகும் பெரும் பேறு உனக்குச் சித்திக்கப் போகிறது. அவர் பூர்ணசந்திரோதயம் என்ற ஒப்பற்ற வடிவழகியைக் கலியாணம் செய்துகொள்ள முடிவாகி இருக்கிறது. நீயும் அவளும் ஒரே அச்சில் கடைந்தெடுக்கப்பட்ட ஒரே மாதிரியான பதுமைகள் போல இருப்பதால் உங்கள் இருவரையும் தமது இரு பக்கங்களிலும் வைத்து உங்கள் இருவருக்கும் தாலி கட்டி சதா காலமும் உங்கள் இருவரோடும் ரமித்திருக்க வேண்டுமென்பது இளவரசருடைய தீர்மானம். ஆகையால், அதற்காகவே நீ இங்கே வரவழைக்கப்பட்டிருக்கிறாய். இவ்வாறு நீ எதிர்பார்க்காமல் உனக்கு வந்து குறுக்கிட்டிருக்கும் அதிர்ஷ்டத்தைப் பற்றி நீ பெரிதும் சந்தோஷமடைவாய் என்பது நிச்சயம். இன்னும் அரைமணி நேரத்தில் இளவரசர் இங்கே வருவார். அவருடைய பிரியப்படி நீ இப்போதே நடந்து அவருடைய பிரியத்துக்கும் தயைக் கும் அருகமானவளாக வேண்டியது உன் கடமை. இதையும் மற்ற இடங்களைப் போல நினைத்து நீ தாறுமாறாக நடந்துகொண்டால், அதனால் உனக்குத்தான் பெருந் தீங்கு நேரும். உன்னை அடையாமல் இளவரசர் விடுவார் என்ற எண்ணமே உனக்கு வேண்டாம். புத்தியோடு பிழைத்துக்கொள்.

இப்படிக்கு

உன்னை அழைத்துவந்த

சிநேகிதை.

என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படித்து முடித்த ஷண்முகவடிவின் மனம் எவ்விதமான பாடுபட்டிருக்கும் என்பதை யூகித்துக் கொள்ள வேண்டுமேயன்றி சொல்வது சாத்தியமான காரியமல்ல.