பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 பூர்ணசந்திரோதயம் - 5 பட்டிருப்பதாகத் தெரிகிறது. நான் கடைசியாக ஷண்முக வடிவைக் கண்ட தினத்தில், நான் எப்படியும் கமலத்தைக் கண்டு பிடிப்பதாக அந்தப் பெண்ணுக்கு உறுதிமொழி சொன்னேன். ஆனால், அதற்குள் இந்தப் பெரிய கலக வழக்கு ஏற்பட்டு விட்டது. ஆகையால், அதை நான் கவனிக்க முடியாமல் போய்விட்டது. அதுவுமன்றி, நான் சொல்லியிருந்தபடி மறுநாள் ஷண்முகவடிவு போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவே இல்லை. அவள் ஊருக்குப் போயிருக்கலாமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது நீங்கள் சொல்வதைப் பார்த்தால், ஷண்முகவடிவுக்கு மறுபடியும் ஏதோ அபாயம் நேர்ந்திருக்க வேண்டுமென்றே நினைக்கிறேன்’ என்று கூறி, தாம் ஷண்முக வடிவைச் சந்தித்த வரலாறு, அவள் கூறிய விருத்தாந்தங்கள், அதன்பிறகு தாமும் அவளும் அம்மணி பாயின் வீட்டிற்குப் - போனகாலத்தில் நடந்த சம்பாஷணையின் விவரம், முடிவில் தாம் அவளை அவசரமாக விட்டுப் பிரிந்து போக நேர்ந்த சந்தர்ப்பம் முதலிய சகலமான விஷயங்களையும் விரிவாக எடுத்துரைத்தார்.

அதைக் கேட்ட நீலமேகம் பிள்ளை சகிக்க வொண்ணாத மனவேதனை அடைந்து சிறிதுநேரம் பிரமித்திருந்து, “நீங்கள் சொல்வதைப் பார்த்தால், கமலத்தின் நிலைமையைவிட ஷண்முகவடிவின் நிலைமையே நிரம்பவும் கவலைக்கிடமாக இருக்கிறதே. மூத்தவள் அம் மணிபாயியின் வசத்திலேயே இருக்கிறாள் என்றும் நாம் எண்ண இடமிருக்கிறது. அவளைக் கொண்டு, நாம் கமலத்தைக் காண்பது ஒருவேளை சாத்திய மாகலாம். ஆனால், இப்போது ஷண்முகவடிவு எங்கே போயிருப்பாள் என்பது தெரியவில்லையே! அவள் மறுபடியும் அம்மணியாயியின் வசத்தில் அகப்பட்டுக் கொண்டிருப்பாள் என்று நினைக்க எவ்வித ஏதுவுமில்லையே’ என்றார்.

இன்ஸ்பெக்டர், “ஆம். அந்த விஷயந்தான் என் மனசிலும் பட்டது. அன்றையதினம் இரவில் நாங்கள் கீழக்கோட்டை