பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 2O1

காசா நாட்டிலிருக்கும் கட்டாரித்தேவன் என்ற திருடனுடைய உதவியைக்கொண்டே, லீலாவதியின் புருஷன் நீலமேகம் பிள்ளையின் தகப்பனாருடைய பிரேதத்தை வெந்நீர் அண்டாவிலிருந்து எடுத்துப் புதைத்தானாம். அவன் தண்டனை அடைந்து போனபிறகு அந்தத்திருடன் லீலாவதியின் மேல் துராசை கொண்டு இந்த மாளிகைக்குள் நுழைந்து ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஆபரணங்களையும் நோட்டுகளையும் மூட்டைகட்டி எடுத்துக்கொண்டு லீலாவதியையும் அபகரித்துக் கொண்டு ஆட்டுமந்தைத் தெருவிலுள்ள ஒரு சந்திற்குள் கொண்டுபோய் அவ்விடத்தில் மதில்கள் உள்ள ஒரு தோட்டத்துக்கு எதிரில் இருக்கும் ஒரு பெரிய ஒட்டு வீட்டுக்குள் கொண்டுபோய் வைத்துக்கொண்டு பலாத்காரம் செய்தானாம். அவ்விடத்தில் ஒரே ஒரு கிழவி இருக்கிறாளாம். லீலாவதி மறுநாள் தான் இணங்குவதாகச் சொல்ல, அவன் அவளை அவ்விடத்திலேயே கிழவியிடம் ஒப்புவித்து திரவிய மூட்டையை எடுத்துக்கொண்டு அவனுடைய சொந்த ஊருக்குப் போய்விட்டானாம். பிறகு அவன் மறுநாள் வருவதற்குள் அவள் தந்திரம் செய்து கிழவியை வெளியில் அனுப்பிவிட்டு ஒட்டின் மேலேறி முன் பக்கத்தில் குதித்து ஓடிவந்துவிட்டாள். அப்படி வந்தவள் தான் நேராக நீலமேகம்பிள்ளையிடம் வந்து அவளது தகப்பனாரின் விஷயங்களைத் தெரிவித்தாள். மறுபடி அவள் உங்களோடு வெண்ணாற்றங்கரைக்கு வந்துவிட்டுத் திரும்பி அகாலத்தில் இந்த மாளிகைக்கு வந்தாள் போலிருக் கிறது. நான் தூங்கிக் கொண்டிருந்தேன். அந்தத் திருடன் லீலாவதிதப்பி ஓடிவந்துவிட்டதை உணர்ந்து மறுபடியும் வந்து எப்படியோ இந்த மாளிகைக்குள் நுழைந்து லீலாவதியைப் பிடித்துத் தூக்கிக் கொண்டு போக எத்தனித்தான். நான் விழித்துக்கொண்டு அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லிப் பார்த்தேன். அவன் கேட்காமல் முரட்டுத்தனம் செய்தான். அவனை நயவஞ்சகமாக வெல்ல வேண்டுமென்று நினைத்து அவனுடைய பிரியப்படி செய்வதாகச் சொல்லி தந்திரமாக