பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O2 பூர்ணசந்திரோதயம் - 5 என் கைத்துப்பாக்கிகளை எடுத்துச் சுட எத்தனித்தேன். அவன் என்மேல் பாய்ந்து துப்பாக்கிகளைப் பிடுங்கிக் கொண்டு நான் வேடிக்கையாகத் தயாரித்து வைத்திருந்த விசை வைத்த நாற்காலியில் என்னை மாட்டிவிட்டு, லீலாவதியையும் கட்டித் தூக்கிக்கொண்டு நானிருந்த இடத்திலும் நெருப்பை வைத்துப் போய் விட்டான். கொஞ்ச நேரத்தில் நெருப்பு நான்கு பக்கங்களிலும் சூழ்ந்துகொண்டு என் உடம்பை எரிக்கத் தொடங்கியது. அதனால், எனக்குப் பிரக்ஞை தவறிப் போய் விட்டது. பிறகு நடந்ததென்ன என்பது எனக்குத் தெரியவில்லை. இன்றைய தினந்தான் கொஞ்சம் பிரக்ஞை வந்தது. கோவிந்தசாமி எல்லா விஷயங்களையும் சொல்லத் தெரிந்து கொண்டேன். உங்களை வரவழைக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேன். நல்லவேளையாக நீங்களும் வந்தீர்கள். நீலமேகம்பிள்ளைக்கும் எனக்கும் அதிகப் பழக்கம் இல்லாவிட்டாலும், அவருடைய நற்குணத்தைப் பற்றி நான் பல தடவைகளில் கேள்விப்பட்டிருக்கிறேன். லீலாவதி சம்பந்தமாக அவருடைய தகப்பனாருக்கு நேர்ந்த முடிவைப் பற்றி நான் நிரம்பவும் வருந்துகிறேன். நான் இந்த நோயிலிருந்து பிழைப்பேன் என்று நினைக்கவில்லை. என்னுடைய பிராணன் அநேகமாய்ப் போய்விட்டது. இன்னம் சில தினங்களில் நான் இறந்துபோய் விடுவேன் என்ற ஒரு நிச்சயம் என் மனசில் ஏற்பட்டுப் போய்விட்டது. திருடன் அபகரித்துக் கொண்டு போன திரவியத்தைத் தவிர பூஸ் திதியாகவும், மாளிகை யாகவும், சாமான்களாகவும், தானியமாகவும் எனக்கு இன்னம் ஐந்துகோடி ரூபாய் பெறுமான சொத்துகள் இருக்கின்றன. என்னிடமிருக்கும் ஐவேஜியத்தனை இந்த ஊர்மகாராஜாவிடம் கூட இராதென்றே நினைக்கிறேன். அப்படியிருந்தும் எனக்குச் சொந்தக் குழந்தைகள் இல்லை. என் தம்பியின் மகளான லீலாவதியும் இன்னொரு பையனுமே எனக்கு நெருங்கிய பந்துக்கள், அந்தப் பையனுடைய பெயர் கலியாணராமன். அவனுக்கும் எனக்கும் ஒத்துக்கொள்ளவில்லை. ஆகையால்,