பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 - பூர்ணசந்திரோதயம் - 5 கொண்டிருந்த காலத்தில் அவர்களுக்குத் தெரியாமல் நான் பக்கத்து அறையில் இருந்தேன். ஆகையால், இந்த விஷயங்களெல்லாம் என் காதில் பட்டன. கோலாப்பூரில் மூத்தவள் உம்மிடம் வாய்தாகேட்டு அதற்கு நீர்இணங்கியிருந்த காலத்தில், அவர்கள் அஞ்சல் மூலமாக ஓர் ஆளைத் தஞ்சைக்கு அனுப்பிஅதுவரையில் நடந்த விஷயங்களைத் தெரிவித்தார்கள். ஷண்முகவடிவை ஏமாற்றி அழைத்து வந்த ஸ்திரீ இந்த ஊர் அரண்மனையில் நிரம் பவும் செல்வாக்கு வாய்ந்தவள். ஆகையால், அந்த ஸ்திரீ எப்படியோ தந்திரம் செய்து இந்த ஊர்ப் பெரிய ராணியிடத்திலிருந்து கோலாப்பூர் போலீஸ் கமிஷனருக்கு ஒரு கடிதம் வாங்கிக்கொண்டு உடனே புறப்பட்டு அங்கே வந்தாள். அதன் பிறகுதான் நீர் சிறைப்படுத்தப்பட்டீர். ஷண்முகவடிவும் மோசடியாக அவ்விடத்துக்கு வரவழைக்கப் பட்டாள். சிறைச் சாலையில் நடந்த காரியங்களெல்லாம் எதிரிகளின்தூண்டுதலின் மேலேயே நடத்தப்பட்டன. இரண்டு முக்கியமான கருத் தோடு அவள் சிறைச்சாலையில் அந்த நாடகத்தை நடத்தி வைத்தாள். அபிராமியிடம் உம்மை வலுக்கட்டாயமாகச் சேர்த்து வைத்துவிட்டால் அவள் எப்போதும் உம்மோடு கூடவே இருந்து உம்முடைய புத்தியை மயக்கி, நீர் பூனாவுக்குப் போகாமல் செய்யவேண்டுமென்பது அவர்களது முக்கியமான எண்ணம். இன்னொன்று ஷண்முக வுடிவு ராஜஸ்திரீ போல இருக்கிறாள் என்பது அவளுக்குத் தெரியுமாதலால், உமது விஷயத்தில் அவளுடைய மனம் முறிந்து மாறிப் போகும் படி செய்து அவளை வஞ்சித்துக் கொணர்ந்து, அவள் மூலமாக பெருத்த ஐசுவரியத்தைத் தான் சம்பாதித்துக் கொள்ளலாம் என்பது. அந்த எண்ணத்துடனேயே அவள் ஷண்முக வடிவை அழைத்து வந்து மருங்காபுரி ஜெமீந்தாருடைய மாளிகையில் கொண்டுபோய் விட்டு விட்டாள். இந்த விஷயங்களை எல்லாம் அவள் தனது மகனிடம் ரகசியமாகச் சொல்லிக் கொண்டிருந்த காலத்தில், நான் பக்கத்து