பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 பூர்ணசந்திரோதயம் - 5 அந்த மனிதன் ‘யார்? அடுத்த வீட்டுக் காரரையா கேட்கிறீர்கள்? அவர்கள் இந்த ஊர் அரண்மன்ைக்குப் போனார்கள் போலிருக்கிறது. நான் கவனித்துப் பார்க்க வில்லை’ என்றான். கலியாணசுந்தரம், ‘ஓகோ அப்படியா சங்கதி! ஆனால், அவர்கள் எப்போது வீட்டுக்குத் திரும்பி வருவார்கள் என்ற சங்கதியெல்லாம் உங்களுக்குத் தெரியாது போலிருக்கிறது. யாரிடம் கேட்டால், அந்தத் தகவல் கிடைக்கும் நான் ஒரு காரியமாக அவர்களைப் பார்க்க வேண்டும்’ என்று நிரம்பவும் விநயமாகக் கூறினான்.

அந்த மனிதன், ‘ஐயா! அந்த வீட்டுச் சங்கதிகளை நான் அவ்வளவாகக் கவனிக்கிறதே இல்லை. அவர்கள் எப்போது திரும்பி வருவார்களென்பது வேறே யாருக்குத் தெரியும் என்பதை நான் எப்படிச் சொல்லுகிறது? அவர்கள் சாதாரண மான மனிதர்களாக இருந்தால், அவர்களோடு நாங்கள் பழகுவோம். அவர்களுடைய சங்கதியெல்லாம் எங்களுக்குத் தெரியும். அவர்களுடைய மாதிரி வேறாக இருப்பதால், அவர்களோடு நாங்கள் சகவாசம் வைத்துக்கொள்ளுகிறதும் அவர்களுடைய போக்குவரத்துகளைக் கவனிக்கிறதும் இல்லை’ என்றான்.

அந்த மனிதன் கூறிய வார்த்தைகளின் உள் கருத்து கலியான சுந்தரத்திற்கு நன்றாக விளங்கவில்லை. தான் தேடிவந்த சோமசுந்தரம் பிள்ளையின் குடும் பத்தார் சகவாசத்திற்கு அருகமற்றவரென்று அந்த மனிதன் அவர்களை இழிவாகப் பேசியதுபோல அவனது மனதில் ஒருவித எண்ணம் உண்டாயிற்று. ஆகையால், கலியாணசுந்தரம் மறுபடியும் பேசத் தொடங்கி, ‘ஐயா! நீங்கள் சொல்லும் வார்த்தை சிலேடையாக இருக்கிறது; பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் சகவாசத்துக்கு அருகமற்றவர்கள் என்ற கருத்தோடு நீங்கள் பேசுகிறீர்களா? அல்லது, அவர்கள் உங்களை அப்படி எண்ணி அலட்சியம் செய்கிறார்கள் என்ற கருத்தோடு சொல்லு