பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 223 வீட்டுக்காரன், “அவர்கள் தலைமுறை தலைமுறையாக இங்கேதான் இருக்கிறார்கள் என்றான்.

கலியாணசுந்தரம், “என்ன ஆச்சரியம்! சுமார் இரண்டுமாத காலத்துக்கு முன்னேதான் நான் அந்த வீட்டுக்கு வந்துவிட்டுப் போனேன். அப்போது யாரும்தாசி அந்த வீட்டில் இல்லையே!” என்றான்.

வீட்டுக்காரன், ‘அப்போது வேறே யார் இருந்தது? அவருடைய பெயரைத்தான் சொல்லுமேன்?” என்றான்.

கலியாணசுந்தரம், ‘அந்த வீடு சோமசுந்தரம் பிள்ளையென்ற ஒரு பெரிய தனிகருடைய வீடல்லவா?’ என்றான்.

வீட்டுக்காரன், ‘அப்படி யார் உமக்குச் சொன்னது? சோமசுந்தரம் பிள்ளை என்பவர் யார்? நானும் இந்த வீட்டில் நாற்பது வருஷகாலமாக இருந்து வருகிறேன். பக்கத்து வீட்டில் சோமசுந்தரம் பிள்ளை என்ற தனிகர் இருப்பதாக நான் கேள்வியுற்றதே இல்லையே! என்றான்.

கலியாணசுந்தரம் குழப்பமே வடிவாக மாறி, ‘என்ன வேடிக்கை இது இந்த மாளிகையிலுள்ள சோமசுந்தரம் பிள்ளை என்ற ஒரு தனிகர் எங்களைச் சேர்ந்த ஒரு குடும்பத்தாருக்கு வெகுகாலமாக பணம் அனுப்பி வந்திருக்கிறார். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி அவரைத் தேடிக்கொண்டு இங்கே வந்தாள். அவர் அந்தப்பெண்ணை.அபிமானபுத்திரியாக வைத்துக்கொண்டிருப்பதால் அந்தப்பெண் இங்கேயே இருக்கிறாள். அவள் இவ்விடத்திலிருந்து பல தடவைகளில் கடிதமும் பணமும் அனுப்பியிருக்கிறாள். நானே நேரில் வந்து சுமார் இரண்டு மாசத்துக்குமுன் அந்தப் பெண்ணை இதே வீட்டில் பார்த்திருக்கிறேன். அப்போது அந்த சோம சுந்தரம் பிள்ளை நோயாயிருப்பதாக அந்தப்பெண் சொன்னாள். அவள் ஒரு நாளும் பொய் சொல்லக் கூடியவளே அல்லவே!” என்றான். - .V-15