பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 பூர்ணசந்திரோதயம் - 5 கொண்டிருக்கிறார். இவர் இந்த ஊர் மகாராஜனுடைய பட்டத் துக்கு வருங்காலத்தில், அந்த இளவரசிதான் பட்டமகிஷியின் ஸ்தானத்துக்கு வரவேண்டும். அந்த இளவரசியின் பெயர் லலிதகுமாரி தேவி என்பது. பூனாவில் நோயாக இருக்கும் தன்னுடைய தகப்பனாரைப் பார்ப்பதற்கு, லலிதகுமாரிதேவி அந்த ஊருக்குப்போய்ச் சுமார் ஐந்தாறு மாதகாலமாயிருக்கும் என்று நினைக்கிறேன். அவள் சிரேஷ்டமான அழகும், உத்தம லக்ஷணங்களும் வாய்ந்தவள்; மகாராஜனுடைய பட்டமகிஷி யாவதற்கு வேண்டிய சகலமான சிறப்புகளும் நிறைந்தவள். ஆனால், இந்த ஊர் இளவரசரோ சதா காலமும் உல்லாச் புருஷராயிருக்கும் ஸ்திரீலோலர். அவர் பட்டமகிஷியைத் தவிர இதர ஸ்திரீகளிடத்திலும் நாட்டமாயிருப்பது லலிதகுமாரிக்குத் தெரிந்து, அவள் அது விஷயமாக அவர்மேல் அருவருப்படைந்து அவரை மிருதுவாகக் கண்டிக்க அதிலிருந்து அவர் அவள் மேல் பகைமை பாராட்டி அவளுடைய அந்தப் புரத்துக்குப் போவதையும், அவளுடன் பேசுவதையும் நிறுத்திவிட்டார். சுமார் இரண்டு வருஷ காலமாக அவர்களுக்குள் மனஸ்தாபம் இருந்து வந்தது. அவருடைய கோபத்தைத் தனித்து, பிரியத்தை மறுபடிசம்பாதித்துக் கொள்ள வேண்டுமென்று அந்த இளவரசி பலவகையில் பிரயத்தனப்பட்டதாகத் தெரிகிறது. அந்த முயற்சி எல்லாம் பயன்படவில்லை. அதன்பிறகு அவள் தன் தகப்பனா ருடைய நோய் காரணமாக ஊருக்குப் போனாள். இப்போது திடீரென்று அந்த இளவரசியைப் பற்றி ஒரு பெருத்த அவதூறு ஏற்பட்டு எங்கும் பரவியிருக்கிறது. அந்த இளவரசியின் சிப்பந்திகளுள் மோகனராவ் என்று ஒரு மணியக்காரன் இருக்கிறான். அவன் நல்ல அழகும் யெளவனப் பருவமும் உடையவன். அவனிடத்தில் அந்த இளவரசி மோகங் கொண்டு அவனைத் தன் ஆசைநாயகனாக வைத்துக்கொண்டு விட்டதாக வும், அதனால் அவள் இப்போது ஒன்பது மாதம் கர்ப்பணியாகி இருப்பதாகவும் இளவரசருக்கு எப்படியோ சங்கதி தெரிந்தது. அவர் வேறு சிலரை அழைத்துக் கொண்டு உடனே பூனாவுக்குப்