பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 பூர்ணசந்திரோதயம்-5 அறியாதவனாய்க் குழம்பிய மனதுடன் சிறிது தூரம் சென்றான். இருவித துன்பங்களும் சஞ்சலங்களும் மாறிமாறி எழுந்து அவனது மனதை ஒறுக்கத் தொடங்கின. கமலத்தின் வரலாறு முற்றிலும் அடியோடு பொய்யாப் போயின. ஆதலால், அவள் அந்தத் தாசி வீட்டில் சேர்ந்து தானும் துர்நடத்தையில் இறங்கி இருப்பாளோ என்ற எண்ணமே மேலாடி நின்றது. தனது தங்கையின் கலியாணத்திற்குக் கூட அவள் வர விரும்பாதது, சோமசுந்தரம் பிள்ளையைத் தனக்குக் காட்ட மறுத்தது முதலிய பல விஷயங்களை அவன் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தான். அவள் தஞ்சைக்கு வந்தவுடன் சோமசுந்தரம் பிள்ளை என்பவரைத் தேடிக் காணவில்லை என்றும், முடிவில் வேறோரிடத்தில் அவரைக் கண்டதாகவும் அவள் கடிதத்தில் எழுதியிருந்ததும் அவனது நினைவிற்கு வந்தது. ஆகவே கமலம் உண்மையில் சோமசுந்தரம் பிள்ளையைக் காணவே இல்லையென்ற நினைவும், அவள் அவரைத் தேடி அலைந்த காலத்தில் தற்செயலாக அந்தத் தாசியைக் கண்டு அவளுடைய மோச வலையில் சிக்கி, துன்மார்க்கத்தில் செலுத்தப்பட்டிருக்க வேண்டுமென்ற நினைவும் உண்டாயின. ஷண்முகவடிவும் உள்ளுற அதற்கு உடந்தையானவளாக இருப்பாளோ என்ற சந்தேகம் ஒரு கூடிணநேரம் அவனது மனதில் தோன்றியது. ஆனாலும், அவளிடமிருந்த கடிதங்களை அவன் நேரில் படித்துப் பார்த்தவன். ஆதலால், இளையவள்மேல் தான் சந்தேகங் கொள்வது நியாயமல்லவென்ற நினைவு உண்டாயிற்று. ஷண்முக வடிவு மகா பரிசுத்தமான நடத்தையும், அருமையான குணங்களும் வாய்ந்த உத்தமி என்ற அபிப்பிராயம் அவனது மனதில் உறுதியாகப் பதிந்துபோயிருந்தது. ஆகையால், அவளது அக்காளின் துர்நடத்தையைக் கருதி அவளை அருவருக்க வாவது, பழிக்கவாவது, சம்சயிக்கவாவது அவனது மனம் கொஞ்சமும் இடந்தரவில்லை; தனது அக்காள் அவ்விதத் துன்மார்க்கத்தில் இறங்கி இருக்கிறாள் என்பதைக் கேட்டால், ஷண்முகவடிவு அந்த அவமானத்தைப் பொறுக்காமல் தனது